இந்திய மாணவர் ஒருவரை சிறைபிடித்து, கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று உயர்கல்வி படித்து வருகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவின் ரோலாவில் உள்ள மிசோரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் படிக்க கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஒரு மாணவர் சென்றுள்ளார். பெயர் வெளியிடப்படாத அந்த மாணவர் தனது உறவினர்களில் ஒருவராலும் மேலும் இருவராலும் சிறைபிடிக்கப்பட்டுள்ளார். கடந்த 7 மாதங்களாக அவர்கள் மூவரும் அந்த மாணவரை சிறைபிடித்து வைத்திருந்த நிலையில், அவருக்கு பல்வேறு சித்ரவதைகளை வழங்கி உள்ளனர்.
அந்த மாணவருக்கு கழிப்பறை வசதி கூட வழங்காமல் அவரை, அடித்து உதைத்து துன்புறுத்தி உள்ளனர். மேலும், மூன்று வீடுகளில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த மாணவரின் துயரமான நிலையை அறிந்த அமெரிக்க குடிமகன் ஒருவர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
undefined
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இதையடுத்து செயின்ட் சார்லஸ் கவுண்டியில் உள்ள கிராமப்புற நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வீட்டிற்கு விரைந்த போலீசார், வெங்கடேஷ் ஆர் சத்தாரு என அடையாளம் காணப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்தனர் ( 35). இவர் தான் பாதிக்கப்பட்ட இந்திய மாணவரின் உறவினர் ஆவார். 23 வயதான ஸ்ரவன் வர்மா பெனுமெட்சா மற்றும் 27 வயதான நிகில் வர்மா பென்மட்சா ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த 3 பேர் மீதும் ஆள் கடத்தல், கடத்தல் மற்றும் தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர் இதுகுறித்து பேசிய போது “ பாதிக்கப்பட்ட மாணவர் கடந்த ஏப்ரல் மாதம் வெங்கடேஷ் சத்தாருவின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அவரை துன்புறுத்த தொடங்கினர். வெங்கடேஷ் சத்தாருவின் ஐடி நிறுவனத்தில் ஒரு நாள் முழுவதும் வேலை செய்ய கூறியுள்ளனர்., பின்னர் மாலை வீட்டு வேலைகளை செய்யவும் அந்த மாணவரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.
குர்பத்வந்த் சிங் பன்னூனை கொலை சதி தீவிரமானது: அமெரிக்கா!
தனது 2 நண்பர்களை அழைத்த வெங்கடேஷ் பாதிக்கப்பட்ட மாணவரை அடிக்க சொல்வார்.. பாதிக்கப்பட்டவர் சத்தமாக கத்தவில்லை என்றால், அவரை கடுமையாக அடிக்கச் சொல்வார். சத்தாரு "இந்தியாவில் அரசியல் மற்றும் சட்ட அமலாக்கத் தொடர்புகளைக் கொண்ட பணக்கார, சக்திவாய்ந்த மனிதர்" என்று பாதிக்கப்பட்ட மாணவர் கூறியுள்ளார்.
7மாதங்களுக்கும் மேலாக, அந்த நபர்கள் மாணவியை ஒரு அடித்தளத்தில் பூட்டிவிட்டு, தரையில் தூங்கும்படி கட்டாயப்படுத்தினர். இது முற்றிலும் மனிதாபிமானமற்றது மற்றும் மனசாட்சியற்றது" என்று விவரித்தார்.
சத்தாரு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் O'Fallon வீட்டில் வசித்து வந்துள்ளார். மனித கடத்தல் மற்றும் ஆவணங்களை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மனித கடத்தலுக்கு பங்களித்ததற்காக அவர் மீது கூடுதலாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட மாணவர் மீட்கப்பட்ட வீட்டில் பெனுமேட்சா மற்றும் பென்மட்சா ஆகியோர் வசித்து வந்தனர்.
தான் எப்போதும் கண்காணிப்பில் இருந்ததாகவும், மிகக் குறைந்த அளவே தனக்கு உணவு வழங்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட அந்த மாணவர் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் தினமும் மூன்று மணி நேரமே தூங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். தங்கள் கண் முன்பு மட்டுமே தாயுடன் போனில் பேச கூட அவரை அனுமதித்ததாகவும், வீடியோ கால் மேற்கொள்ள அனுமதி வழங்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இந்த தகவலறிந்து மாணவரை மீட்க சென்ற போது, முதலில் அவர்கள் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்று காவல்துறை தெரிவித்தனர். இருப்பினும், அந்த மாணவர் அடித்தளத்திலிருந்து ஓடி வந்தார். அவரின் உடல் முழுக்க காயங்கள், சிராய்ப்புகள் மற்றும் வடுக்கள், வீக்கங்கள் இருந்தன என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.