அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்.. வெளியான பகீர் தகவல்.!

Published : Feb 16, 2024, 03:18 PM ISTUpdated : Feb 16, 2024, 03:22 PM IST
அமெரிக்காவில் மர்மமான முறையில் இறந்து கிடந்த இந்திய வம்சாவளிக் குடும்பம்.. வெளியான பகீர் தகவல்.!

சுருக்கம்

கேரளாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி (42). 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜித் ஹென்றிக்கும், அலிஸ் பிரியங்காவுக்கும் (40) திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் நோவா, நெய்தன் என இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். 

இந்திய வம்சாவளிக் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்  இதுகுறித்து பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

கேரளாவைச் சேர்ந்தவர் ஆனந்த் சுஜித் ஹென்றி (42). 9 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜித் ஹென்றிக்கும், அலிஸ் பிரியங்காவுக்கும் (40) திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 4 வயதில் நோவா, நெய்தன் என இரட்டைக் குழந்தைகள் இருந்தனர். ஆனந்த் சுஜித் ஹென்றி மெட்டா, கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்களில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராகப் பணியாற்றி வந்தார். அதேபோபால் அலிஸ் பிரியாங்கா ஐ.டி நிறுவனத்திலும் பணியாற்றி வந்தனர். 

இதையும் படிங்க: தண்ணீர் வாங்கி குடிக்க போன இடத்தில் பள்ளி மாணவனுக்கு காமப்பசி! பெண்ணை உல்லாசத்து அழைத்த போது நடந்த பயங்கரம்.!

கடந்த 2023 ஜூன் மாதம் மெட்டா வேலையை ராஜினாமா செய்த ஹென்றி, நியூ ஜெர்சியின் சான் மேடியோ கவுண்டியில் 2 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்களா ஒன்றில் குடியேறினார். இந்நிலையில், அந்த பங்களாவில் ஹென்றி குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேரும் மர்ம்மான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். குழந்தைகள் படுக்கையறையிலும், ஹென்றியும் பிரியங்காவும் குளியலறையில் சடலமாகக் கிடந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரின் உடல்களை மீட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க:  புருஷனுக்கு தெரியாமல் கள்ளக்காதலனுடன் அடிக்கடி உல்லாசம்.. இறுதியில் பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மனைவியை துப்பாக்கியால் பலமுறை சுட்டுக் கொன்று, குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனந்த் சுஜித் ஹென்றி குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். பின்னர் அது கைவிடப்பட்டு சேர்ந்தே வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

உலகில் 3 பேருக்கு மட்டுமே உள்ள அரிதிலும் அரிதான புதிய இரத்த வகை கண்டுபிடிப்பு!
டிரம்புடன் போனில் பேசிய பிரதமர் மோடி! வர்த்தக பேச்சுவார்த்தைக்கு மத்தியில் முக்கிய ஆலோசனை!