போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக குற்றச்சாட்டு… இந்திய வம்சாவளிக்கு சிங்கப்பூரில் நாளை தூக்கு!!

By Narendran S  |  First Published Apr 25, 2023, 7:21 PM IST

போதைப் பொருளைக் கடத்த உதவிய குற்றத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 


போதைப் பொருளைக் கடத்த உதவிய குற்றத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நபருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. சிங்கப்பூரில் போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கும் குற்றத்துக்கு கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் போதைப் பொருளைக் கடத்த உதவிய குற்றத்தில் ஈடுபட்ட இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நபருக்கு நாளை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. 2014 ஆம் ஆண்டு இந்தியா வம்சாவளியை சேர்ந்த தங்கராஜு சுப்பையா என்பவர் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டாா்.

இதையும் படிங்க: ஆபரேஷன் காவேரி: முதல்கட்டமாக 278 இந்தியர்களுடன் சூடானில் இருந்து புறப்பட்டது இந்திய போர்க்கப்பல்..

Tap to resize

Latest Videos

மேலும் இவருக்கு போதைப் பொருள் கடத்துபவர்களுடன் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதுமட்டுமின்றி ஒரு கிலோ போதைப் பொருளைக் கடத்த திட்டமிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, உயா்நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், தங்கராஜுக்கு தூக்கு தண்டனை நாளை (ஏப். 26) நிறைவேற்றப்பட உள்ளதாக அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு அரசுத் தரப்பில் அனுப்பப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தூக்கு தண்டனைக்கு எதிரான செயல்பாட்டாளா்கள், நீதியைப் பெறுவதற்கான உரிமைகள் அவருக்கு மறுக்கப்பட்டன. அவா் தரப்பில் வழக்குரைஞா் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

இதையும் படிங்க: உலக ராணுவ செலவு இதுவரை இல்லாத அளவுக்கு உயர்வு.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..?

மேல்முறையீட்டில் அவரே வாதிட்ட நிலையில், உயா்நீதிமன்றம் அவரது மனுவை நிராகரித்து விட்டது. மிகவும் கொடிய தண்டனை அளிப்பது போதைப் பொருள் பயன்பாட்டைக் குறைப்பதில் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இந்தத் தண்டனைகள் கள்ளச்சந்தையில் போதைப் பொருள் விற்பனைக்கு வழிவகுப்பதோடு, அதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவ சேவைகள் கிடைப்பதைத் தடுக்கும் என்று தெரிவித்தனர். இந்த எதிர்ப்புக்கு மத்தியில் நாளை இந்தியா வம்சாவளி  தங்கராஜு சுப்பையாவுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!