தாறுமாறாக வாகனத்தை ஓட்டிய இந்திய ஓட்டுநர்.. லாரி மோதி மூதாட்டி பலி - 2 தண்டனைகளை அறிவித்த சிங்கப்பூர் கோர்ட்!

By Ansgar R  |  First Published Dec 22, 2023, 10:49 AM IST

Indian National Driver Jailed in Singapore : லாரியை 'பொறுப்பற்ற முறையில்' ஓட்டி, மூதாட்டி ஒருவரின் இறப்புக்கு காரணமாக மாறிய இந்திய நாட்டை சேர்ந்த ஓட்டுனருக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் தண்டனை அளித்துள்ளது.


நேற்று வியாழன் அன்று வெளியான தீர்ப்பின்படி, சிவலிங்கம் சுரேஷ் என்ற அந்த நபருக்கு 10 மாத சிறை தண்டனை வழங்க வாதிடப்பட்டுள்ளது. இது அவருக்கு வழங்கப்பட்ட உள்ள 2 தண்டனைகளில் முதல் தண்டனையாகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சிங்கப்பூரில் ஸிப்ரா கிராஸ்ஸிங் பகுதியில் சாலையை கடக்க முயன்றுள்ளார் ஒரு 79 வயது சிங்கப்பூரில் வசிக்கும் சீன நாட்டு மூதாட்டி. 

அப்போது சாலையை சரிவர கவனிக்காத லாரி ஓட்டுநர் சுரேஷ், மூதாட்டியின் மீது லாரியை மொத அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிகிச்சை பலனின்றி விபத்து நடந்த அன்றைய தினமே இறந்தார். கடந்த 10 மாதங்களை வழக்கு நடந்து வந்த நிலையில், சுரேஷ் தனது தவறை கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து அவருக்கு நேற்று தண்டனை வழங்கப்பட்டது என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

Tap to resize

Latest Videos

பயணிகள் கவனத்திற்கு.. இனி சிங்கப்பூருக்குள் "அதை" கொண்டு சென்றால் அபராதம் நிச்சயம் - அமலாகும் புது ரூல்ஸ்!

கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டிச் சென்ற அவர், பெண்ணை மோதியதால், தலையில் காயம் ஏற்பட்டு, அவர் அன்றே உயிரிழந்தார் என, நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சுரேஷின் தண்டனையைத் தொடர்ந்து, ஏற்கனவே சில முறை தவறாக வாகனம் ஓட்டிய வரலாற்றைக் கொண்ட அவருக்கு, அவர் விடுதலையான பிறகு 8 ஆண்டுகளுக்கு அனைத்து வகுப்பு ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவோ அல்லது பெறவோ தகுதியற்றவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை அரசு வழக்கறிஞர் பெனடிக்ட் தியோங் கூறுகையில், சுரேஷ் சாலையில் நின்ற அந்த மூதாட்டியை கவனிக்கத் தவறிவிட்டார், மூதாட்டி Ngee ஆன் தொடக்கப் பள்ளிக்கு அருகில் ஒரு ஸிப்ரா கிராஸ்ஸிங் பகுதியை கடக்கும்போது, ​​அவர் மீது சுரேஷ் மோதினார் என்றார். லாரியின் இயந்திரக் கோளாறால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் அல்லது அதற்குக் காரணமாயிருக்கலாம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறினார்.

நியூ ஜெர்சியில் காணாமல் போன இந்திய மாணவி.. தகவல் தருபவர்களுக்கு 10,000 டாலர் பரிசு - FBI அறிவிப்பு! ஏன்?

டிபிபி தியோங், சுரேஷுக்கு 10 முதல் 11 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கவும், எட்டு ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதிக்கவும் நீதிமன்றத்தை கோரினார். மேலும் சுரேஷ் ஏற்கனவே மோசமாக வாகனம் இயக்கிய விஷயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார். கவனிப்பு மற்றும் கவனிப்பு இல்லாமல் வாகனத்தை ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக, சுரேஷுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 10,000 சிங்கப்பூர் டாலர்கள் வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!