அந்த நபர் இருபதுக்கும் மேற்பட்ட தங்கக் கட்டிகளை செலுத்துவதையும் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சீனாவைச் சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ஒரு வீட்டை வாங்குவதற்கு ரூ.7 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளைச் செலுத்தியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் இது தொடர்பான வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
பணம் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைக்குப் பதிலாக தங்கக் கட்டிகளைச் செலுத்தி வீட்டை வாங்க முடிவு செய்திருக்கிறார் அந்த சீன ஆசாமி. ஒவ்வொரு தங்கக் கட்டியும் 60,000 யுவான் (தோராயமாக ரூ. 7,14,045 லட்சம்) மதிப்புடையது என்று சொல்லபடுகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்படும் வீடியோவில் வீடு வாங்குவதற்காக அந்தப் பணக்காரர் தங்கத்தை வாங்கிருப்பதைக் காண முடிகிறது. அவர் இருபதுக்கும் மேற்பட்ட தங்கக் கட்டிகளை செலுத்துவதையும் வீடியோவில் காணலாம். இந்த வீடியோ குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குகைக்குள் போட்டோஷூட் நடத்திய திருமண ஜோடி! நடுவில் புகுந்து சம்பவம் செய்த பாம்பு!
ஒரு பயனர் இவர் என்ன அரண்மனை வாங்குகிறாரா என்று ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறார். ஒருவர் ஒருபடி மேலே சென்று ஷாங்காய் நகரம் முழுவதையும் வாங்குகிறார் போலிருக்கிறது என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
இன்னும் சிலர், கரன்சியை விட இப்படி தங்கத்தைக் கொடுப்பது மேலானது என்றார்கள். ஒருவர், "அங்கு (சீனா) நிலம் கூட வைத்திருக்க முடியாது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேல் எதுவும் இல்லை. எல்லாம் அவர்களுக்குத்தான் சொந்தம். வாடகைக்குதான் இருக்க முடியும்" என்று விமர்சிக்கிறார்.
டிசம்பர் 21: ஆண்டின் மிக நீண்ட இரவைக் கொண்ட நாளாக இருக்கும்! ஏன் தெரியுமா?