நியூ ஜெர்சியில் காணாமல் போன இந்திய மாணவி.. தகவல் தருபவர்களுக்கு 10,000 டாலர் பரிசு - FBI அறிவிப்பு! ஏன்?

By Ansgar R  |  First Published Dec 22, 2023, 9:46 AM IST

Indian Student Missing : அமெரிக்காவின் நியூஜெர்சியில் இருந்து காணாமல் போன இந்தியாவைச் சேர்ந்த 29 வயது மாணவியை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதியாக வழங்கப்படும் என FBI அறிவித்துள்ளது.


மயூஷி பகத் என்ற அந்த இந்திய மனைவி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் தான் பயின்று வந்தார். இந்த சூழலில் சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் காணாமல் போனார். கடைசியாக கடந்த ஏப்ரல் 29, 2019 அன்று மாலை ஜெர்சி சிட்டியில் உள்ள தனது குடியிருப்பில் இருந்து வெளியேறியுள்ளார். அப்போது அவர் "பைஜாமா பேன்ட் மற்றும் கருப்பு டி-சர்ட்" அணிந்திருந்தார் என்று கூறப்படுகிறது. 

இதனை அடுத்து கடந்த மே 1, 2019 அன்று அவரை காணவில்லை என அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் சுமார் 4 ஆண்டுகளாக அவரை தேடிவரும் நிலையில் இப்பொது மக்களின் ஆதரவை FBI நாடியுள்ளது. அந்த காணாமல் போன பெண் இருக்கும் இடம் அல்லது அவரை மீட்பதற்கான தகவல்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதியாக FBI வழங்குகிறது.

Tap to resize

Latest Videos

தங்கக் கட்டிகளை அள்ளிக் கொடுத்து வீடு வாங்கிய நபர்! வைரலாகும் விநோத சம்பவம்!

கடந்த ஆண்டு ஜூலை மாதம், FBI தங்களது "காணாமல் போனவர்கள்" பட்டியலில் அவரை சேர்த்தது மற்றும் அவரைப் பற்றிய தகவல்களுக்கு உதவ பொதுமக்களின் உதவியை நாடியது. ஜூலை 1994ல் இந்தியாவில் பிறந்த செல்வி பகத், ஸ்டுடென்ட் விசாவில் அமெரிக்காவில் படித்து வந்துள்ளார். நியூயார்க் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் படித்து அவருக்கு, FBIன் அறிக்கையின்படி ஆங்கிலம், இந்தி மற்றும் உருது ஆகிய மொழிகள் தெரியும் என்று கூறப்படுகிறது. 

துப்பறியும் நபர்கள் அந்த பெண்ணுக்கு நியூ ஜெர்சியில் உள்ள சவுத் ப்ளைன்ஃபீல்டில் நண்பர்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். செல்வி பகத் பற்றிய தகவல், அவர் இருக்கும் இடம் அல்லது அவர் குறித்த தகவல்கள் அறியப்பட்டால் FBI அல்லது ஜெர்சி நகர காவல் துறையை அழைக்க வேண்டும் என்று FBI மக்களுக்கு தெரிவித்துள்ளது. 

9 கோடிக்கு விற்பனையான இளவரசி டயானாவின் இந்த நீல நிற ஆடை நினைவிருக்கிறதா..?

"அவரது இருப்பிடம் அல்லது மீட்புக்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு அவர்கள் 10,000 அமெரிக்க டாலர்கள் வரை வெகுமதியைப் பெறலாம்" என்று கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கை கூறியது. செல்வி பகத் 5'10" உயரம் கொண்டவர். கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர். அவர் F1 மாணவர் விசாவில் 2016ல் அமெரிக்காவிற்கு வந்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

click me!