கொரானாவால் கொத்து கொத்தா செத்தாலும் கெத்து விடாத சீனா...!! இந்தியாவின் மருந்து வேண்டாம் என வீராப்பு...!!

By Ezhilarasan BabuFirst Published Feb 22, 2020, 4:25 PM IST
Highlights

சீனாவுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தயார்நிலையில் உள்ள இந்திய விமானத்திற்கு  சீனா அனுமதி வழங்க மறுத்துவருகிறது.  பிரான்ஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விமானங்களை சீனா உடனுக்குடன் அனுமதித்து வரும் நிலையில்  இந்திய விமானத்தை அனுமதிப்பதில் திட்டமிட்டு கால தாமதம் செய்து வருகிறது. 

சீனாவுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல தயார்நிலையில் உள்ள இந்திய விமானத்திற்கு  சீனா அனுமதி வழங்க மறுத்துவருகிறது.  பிரான்ஸ் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் விமானங்களை சீனா உடனுக்குடன் அனுமதித்து வரும் நிலையில்  இந்திய விமானத்தை அனுமதிப்பதில் திட்டமிட்டு கால தாமதம் செய்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா மிகப் பெரும் அழிவை சந்தித்து வருகிறது .  இதுவரை சுமார் 2500க்கும் மேற்பட்டோர் குருணை வைரஸுக்கு உயிரிழந்துள்ளனர் . 

சுமார்  75 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில்  மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டு சீனா திணறி வருகிறது.  இந்நிலையில் சீனாவுக்கு உதவ முன்வந்துள்ள இந்தியா மருந்து பொருட்களுடன் சீனா செல்ல திட்டமிட்டுள்ளது.  பின்னர் அங்கிருந்து திரும்பி வரும்போது சீனாவில் சிக்கித்தவிக்கும் 100  இந்தியர்களை அழைத்து வரவும் இந்திய திட்டமிட்டுள்ளது .   அதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான  சிஎஸ்- 17 குளோப்மாஸ்டர் என்ற  விமானப்படை விமானம்  நேற்று சீனா செல்வதாக இருந்தது . சீனாவுக்கு சென்று திரும்பும்போது இந்தியர்களை ஏற்றி வர திட்டமிடப்பட்டிருந்தது ,  அதேபோல் சீனாவின் வுஹான் நகரில் இருக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப விரும்பினால் அவர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தை அனுகும்படி ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது . 

ஏற்கனவே இரண்டு சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 647 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் .  இந்நிலையில் நேற்று செல்ல இருந்த இந்தியா விமானம் சீனாவின் அனுமதி கிடைக்காததால் டெல்லியில் காத்திருக்கிறது இந்திய விமானத்திற்கு அனுமதி வழங்க சீன அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது இதனால் நாடு திரும்ப காத்திருக்கும் இந்தியர்கள் தொடர்ந்து தவித்து வருகின்றனர் பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் விமானங்களுக்கு  சீனா உடனுக்குடன் அனுமதி வழங்கி வரும் நிலையில் இந்திய விமானத்தை மாத்திரம் திட்டமிட்டு காலம் தாழ்த்தி வருவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது . 
 

click me!