
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ராம் நகரைச் சேர்ந்தவர் பர்வேஷ் அலிகான். இவர் கடந்த 20 ஆண்டுகளாக சவுதி அரேபியாவின் டமாம் நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 30 ஆம் தேதி குடும்பத்தாருடன் கடற்கரைக்கு சென்றுள்ளார். மனைவி, மகள் மற்றும் மகனுடன் அருகில் உள்ள அல்கோபார் கடற்கரைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
பர்வேஷ் அலிகான், மகன், மகளுடன், கடல்நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவரின் மகள் சாஹர் பர்வேஷ் (15) திடீரென மயக்கமடைந்தார்.
பதறியடித்துக் கொண்டு சாஹர் பர்வேஷை, பர்வேஷ் அலிகான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். மருத்துவமனையில் சாஹரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக கூறினர்.
இது குறித்து பர்வேஷ் அலிகான் கூறுகையில், நான் என் குடும்பத்தாருடன் கடற்கரையில் கூடினோம். என் மகள் கடல் அலைகளில துள்ளித் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.
சிறிது நேரத்தில் என் மகள், தண்ணீரில் இருந்து வெளியே வந்தாள். திடீரென மயக்கமடைந்த மகளின் நிலைமை மோசமடைந்தது. மருத்துவர்கள், எனது மகள் மாரடைப்பால் இறந்துவிட்டாள் என்று கூறிவிட்டனர். இனிதான பயணம் என்று நினைத்தேன். ஆனால், மகளை பறிகொடுத்துவிட்டேன் என்று பர்வேஷ் அலிகான் கூறினார்.