அதிரடி... சீன எல்லையில் பீரங்கிகளை குவிக்கிறது இந்தியா.!! அத்துமீறினால் அடித்து நொறுக்கவும் திட்டம்...!! அமெரிக்கா உறுதுணை..!!

By Ezhilarasan Babu  |  First Published Oct 8, 2019, 1:57 PM IST

கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் 777 ரக பீரங்கிகளை கொள்முதம் செய்ய சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.  இந் நிலையில் பீரங்கிகளை அமெரிக்கா தயாரித்து முடித்து இந்தியாவிடம் வழங்க உள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த பீரங்கிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன. வந்த கையோடு அவைகளை சீன எல்லையில் நிறுத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன்  அத்துமீறி நடந்து கொண்டால் தக்க பதிலடி கொடுக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. 


சீன எல்லையில் இந்தியா, அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய 145 , டிரிபில்  7  ரக பீரங்கிகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது. இந்தாண்டின் இறுத்திக்குள் தளவாடங்களை எல்லைக்கு நகர்த்தும்  பணிகள்  நிறைவடையும் என்றும் பாதுகாப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

 

Latest Videos

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எப்படி தொல்லை கொடுத்து வருகிறதோ,  அதேபோல் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் ஒரு பகுதி தனக்கு சொந்தம் என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்க  இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,  இந்திய பிரமர் மற்றும் குடியரசுத் தலைவர்கள் அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதிக்கு  சென்று இந்தியாவிற்கே அது சொந்தம் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் வொவ்வொரு முறையும் நமது தலைவர்கள் அங்கு செல்லும்போதெல்லாம்  சீனா எதிர்ப்பு தெரிவித்து எல்லையில் பிரச்சனை செய்து வருகிறது. சில நேரங்களில் அருணாச்சலப் பிரதேச எல்லைப்பகுதியில்  எல்லையைத் தாண்ட  சின ராணுவம் முயற்சிப்பதும் இந்திய ராணுவம் அதை தடுக்க போரடுவதுமாக விவகாரம் தலையெடுத்து வருகிறது. இந்த நிலையில் சீனாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நிலையில் உள்ள இந்தியா, அதற்கு தயாராகும் விதத்தில்  சீன எல்லையில் அதி நவீன பீரங்கிகளைநிறுத்ததிட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் 777 ரக பீரங்கிகளை கொள்முதம் செய்ய சுமார் 5 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.  இந் நிலையில் பீரங்கிகளை அமெரிக்கா தயாரித்து முடித்து இந்தியாவிடம் வழங்க உள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் அந்த பீரங்கிகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட உள்ளன.வந்த கையோடு அவைகளை சீன எல்லையில் நிறுத்தவும்  திட்டமிடப்பட்டுள்ளன. இதன் மூலம் சீனாவுக்கு எச்சரிக்கை விடுப்பதுடன்  அத்துமீறி நடந்து கொண்டால் தக்க பதிலடி கொடுக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே எல்லையில் பீரங்கிகள் நிறுத்தப்பட உள்ளதாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு முறை நிறுத்தப்படும் பீரங்கிகள் எந்த நிலையிலும் மீண்டும் பின்வாங்கப்படாது என்றும்,  காலத்திற்கும் அது தொடர்ந்து எல்லையிலேயே பாதுகாப்பிற்காக நிறுத்தப் பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரான்ஸ் அமெரிக்கா ரஷ்யா  நாடுகளுடன் பாதுகாப்பு தொடர்பாக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அந்நாடுகள் ராணுவ தளவாடங்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து வருகின்றன. இந்திய விமானப்படையை  பலப்படுத்தும் நோக்கி இந்தியா பிரான்சுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளது. இதே நேரத்தில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி  சுமார்  145 பீரங்கிகள் விரைவில் இந்தியா வர உள்ளன. அதில் ஒரு ரெஜிமென்ட்க்கு பதினெட்டு பீரங்கிகள் என 7 ரெஜிமெண்ட்களாக பிரித்து சுமார் 126 பீரங்கிகள்  சீன எல்லையில் இமாச்சல பிரதேசத்தில் நிற்கவைக்கப்பட உள்ளது குறிப்பிடதக்கது.
 

click me!