அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து... 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு... 22 பேர் பத்திரமாக மீட்பு..!

By vinoth kumar  |  First Published Oct 8, 2019, 1:20 PM IST

துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது, மோசமான வானிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.


துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

தற்போது மத்திய தரைக் கடல் பகுதியில் மோசமான வானிலை காரணமாக கடும் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால், அகதிகள் கப்பல் மற்றும் பல படகுகள் கவிழ்ந்து உயிரிழப்பது தொடர் கதையாக இருந்து வருகிறது. 

Latest Videos

இந்நிலையில், துனிசியா நாட்டிலிருந்து 50 பேருடன் மத்திய தரைக்கடல் வழியாக அகதிகள் படகு ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அப்போது, படகு அங்குள்ள லம்பேடுசா தீவை நெருங்கியபோது, மோசமான வானிலை காரணமாக கடல் அலையில் சிக்கி கவிழ்ந்தது. இதில் 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக இத்தாலி கடற்கரை படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இரு மீட்பு கப்பல்களுடன் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 22 பேரை உயிருடன் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

click me!