சிங்கப்பூர் நாட்டின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது
நிலவின் ஆராய்ச்சிக்காக சந்திரயான்3 வின்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியுள்ள நிலையில், சிங்கப்பூர் நாட்டின் DS-SAR உட்பட 7 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து ஜூலை 30 ஆம் தேதி காலை 6.30 மணிக்கு PSLV-C56 ராக்கெட் மூலம் DS-SAR செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. அந்த செயற்கைக்கோளுடன் இணைந்து வேறு 6 செயற்கைக்கோள்களும் விண்ணிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது. சிங்கப்பூர் அரசை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கப்பூரின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான DSTA மற்றும் எஸ்.டி இன்ஜினியரிங் ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் கீழ் DS-SAR செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வந்ததும், சிங்கப்பூர் அரசாங்கத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்காக செயற்கைக்கோள் புகைப்படத் தேவைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் என தெரிகிறது. தங்கள் வணிக வாடிக்கையாளர்களுக்கு மல்டி-மாடல், உயர்ரக படங்கள், ஜியோஸ்பேஷியல் சேவைகளுக்கு இந்த செயற்கைக்கோளை ST இன்ஜினியரிங் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
DS-SAR செயற்கைக்கோளில் இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாக்கிய ரேடார் உள்ளது. அனைத்து வகையான வானிலை, பகல், இரவு நேரங்களில் புகைப்படம் எடுக்கும் திறன் கொண்டது இந்த செயற்கைக்கோள். மேலும் முழு துருவமுனைப்பில் ஒரு மீட்டர் தெளிவுத்திறனில் இமேஜிங் செய்யும் திறன் கொண்டது.
🇮🇳PSLV-C56🚀/🇸🇬DS-SAR satellite 🛰️ Mission:
The launch is scheduled for
📅 July 30, 2023
⏲️ 06:30 Hrs. IST
🚩First launch pad SDSC-SHAR, Sriharikota. has procured PSLV-C56 to deploy the DS-SAR satellite from DSTA & ST Engineering, Singapore
and 6 co-passenger… pic.twitter.com/q42eR9txT7
விண்வெளித் துறையின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட், 360 கிலோ எடையுள்ள DS-SAR செயற்கைக்கோளை அனுப்புவதற்கு PSLV-C56 ராக்கெட்டை வாங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. PSLV-C56 ஆனது C55ஐப் போலவே கட்டமைக்கப்பட்டுள்ளது.
DS-SAR செயற்கைக்கோளுடன் இணைந்து VELOX-AM, ARCADE, SCOOB-II, NuLoN, Galassia-2, ORB-12 STRIDER ஆகிய 6 செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.