பிரதமர் புகைப்படத்தை பயன்படுத்தி ஆன்லைன் மோசடி.. மக்களே உஷார் - PM வெளியிட்ட அவசர செய்தி!

By Ansgar R  |  First Published Jul 23, 2023, 6:16 PM IST

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், பிரதமர் லீ கிரிப்டோகரன்சி முதலீடுகளை அங்கீகரிக்கிறார் என்ற போலி தகவல் ஒன்று வலம்வந்தது.


சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், தனது புகைப்படத்தை பயன்படுத்தி நடைபெறும் ஆன்லைன் மோசடிகள், போலிச் செய்திகள் அல்லது போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என்றும், மாறாக அந்த சம்பவம் குறித்து உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்குமாறும் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார். நேற்று ஜூலை 22ம் தேதி தனது ஃபேஸ்புக் மூலம் இந்த செய்தியை அவர் பகிர்ந்துள்ளார். 

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமர் லீ கிரிப்டோகரன்சி முதலீடுகளை அங்கீகரிக்கிறார் என்ற போலி தகவல் ஒன்று வலம்வந்தது. இந்நிலையில் அவை முடக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதுபோன்ற சில போலி தகவல்கள் மீண்டும் வலம்வர துவங்கியுள்ளன. பிரதமர் வெளியிட்ட பதிவில், அரசு ரீதியாக ஏதேனும் ஒரு அறிவிப்போ அல்லது வேறு விஷயங்கள் வெளியாகும்போது தான் இதுபோன்ற போலி செய்திகள் அதிகம் பரவுவதாக கூறியுள்ளார். 

Tap to resize

Latest Videos

ட்ரில்லர் வைத்து தலையில் சர்ஜரி.. தனக்கு தானே ஆபரேஷன் செய்துகொண்ட நபர் - இறுதியில் நடந்து என்ன?

இதுபோன்ற சந்தர்ப்பங்களை பயன்படுத்தி, மோசடி பேர்வழிகள் கிரிப்டோ மோசடிகள் மற்றும் போலி விளம்பரங்களை தனது படத்தை பயன்படுத்துகின்றனர் என்றார் அவர், அதே நேரத்தில் தான் அந்த செய்திகளை அங்கீகரிக்கவில்லை என்பதையும் பிரதமர் தெளிவுபடுத்தினார். 

உங்களுக்கு ஒரு பொருளை விற்க, அந்த விளம்பரத்தில் எனது படத்தைப் பயன்படுத்தினால், ஏதேனும் திட்டத்தில் முதலீடு செய்யச் சொன்னால் அல்லது பணம் அனுப்பச் சொல்ல எனது குரலைப் பயன்படுத்தினால், நிச்சயம் அது நான் அல்ல" என்று PM லீ எச்சரித்துள்ளார். பிரதமரே, தான் சில சமயங்களில் இதுபோன்ற போலி செய்திகளை பார்ப்பதாகவும், உடனே அதுகுறித்து சம்பந்தப்பட்ட குழுக்களுக்குப் புகாரளித்ததாகவும் கூறியுள்ளார்.

சிங்கப்பூரர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி.. மூன்று ஆண்டுகள் கழித்து Green Signal கொடுத்த சீனா - முழு விவரம்!

click me!