பயங்கரவாதிகளை அழிக்க முடிவு...!! எல்லைதாண்டி அதிநவீன ஹெலிகாப்டர்களை அனுப்பிவைத்தது இந்தியா..!!

By Ezhilarasan BabuFirst Published Oct 17, 2019, 5:13 PM IST
Highlights

இந்தியா தான் உறுதியளித்தபடி ஆப்கனுக்கு அதி நவீன ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஹெலிகாப்டர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்ற அவர். பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து ஆப்கனிஸ்தானில் அமைதி நிலைநாட்ட இந்தியா செய்யும் உதவிகளை ஆப்கனிஸ்தானும் ஆப்கனிஸ்தான் மக்களும்  என்றும் மறக்க மாட்டார்கள் என்றார். 

ஆப்கானிஸ்தான் நாட்டு ராணுவத்திற்கு பலம் கூட்டவும், தாலிபன் பயங்கரவாதிகளை எதிர்க்கவும் இந்தியா இரண்டு அதிநவீன போர் ஹெலிகாப்டர்களை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஏற்கனவே அந்நாட்டிற்கு இந்தியா கொடுத் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஹெலிகாப்டர்கள் வழங்கப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் பல ஆண்டுகளாக தாலிபன்களின் கட்டுபாட்டில் இருந்து வந்து பல இன்னல்களை சந்தித்து வந்தது. ஆப்கானிஸ்தானை பல வகைகளில் அவர்கள் அச்சுறுத்தியும் சிதைத்தும் வந்தனர். பின்னர் அவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்கும் முயற்ச்சியில் அமெரிக்கா இறங்கியது, அதன் விளைவாக ஆப்கன் அரசு படைகளுடன் இணைந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டுப் படைகள் அப்பயங்கரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசு படைக்கும்  தாலிபன் பயங்கரவாதிகளுக்கும்  இடையே கடும் மோதல் நீடித்து வருகிறது. பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்கி அழிக்கும் வகையில் அதிநவீன ஹெலிகாப்டர்களை இந்தியாவிடம் ஆப்கானிஸ்தான் கோரியிருந்தது.  ஏற்கனவே இந்தியாவின் சார்பில் கடந்த 2015-16 ஆம் ஆண்டில் அந்நாட்டு விமான படைகளுக்கு இந்தியா 4 ஹெலிகாப்டர்களை வழங்கியிருந்த நிலையில் தற்போது அவற்றுக்கு மாற்றாக நான்கு புதிய அதிநவீன எம்ஐ 24 ரக  போர் ஹெலிகாப்டர்களை இந்தியா பரிசாக வழங்கியுள்ளது.

கொடுத்த வாக்குறுதியின்படி இரண்டு புதிய ஹெலிகாப்டர்களை சில மாதங்களுக்கு முன்பு வழக்கியிருந்த நிலையில் அடுத்த 2 ஹெலிகாப்டர்களை ஆப்கனிஸ்தான் ராணுவத்திடம் இந்தியா சில தினங்களுக்கு முன்பு வழங்கியது. அதனைப் பெற்றுக்கொண்ட ஆப்கனிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர்,  இந்தியா தான் உறுதியளித்தபடி ஆப்கனுக்கு அதி நவீன ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஹெலிகாப்டர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என்ற அவர். பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழித்து ஆப்கனிஸ்தானில் அமைதி நிலைநாட்ட இந்தியா செய்யும் உதவிகளை ஆப்கனிஸ்தானும் ஆப்கனிஸ்தான் மக்களும்  என்றும் மறக்க மாட்டார்கள் என்றார். அப்போது அவருடன் ஆப்கனிஸ்தானுக்கான இந்திய தூதர் வினைகுமார் உடன் இருந்தார். ஏற்கனவே ஆப்கானிஸ்தானில் உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக இந்தியா 2 பில்லியன் டாலர்கள் வரை அங்கு முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

click me!