மூன்று புதிய ஸ்கார்பீன் நீர்மூழ்கி கப்பல்கள்! இந்தியா - பிரான்ஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

By SG Balan  |  First Published Jul 15, 2023, 11:23 AM IST

ரூ.23,000 கோடி மதிப்பீட்டில் பிரெஞ்சு கடற்படைக் குழுவுடன் இணைந்து மசாகன் உள்நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க உள்ளது.


பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் மும்பையின் மசாகன் கப்பல் கட்டும் துறையில் மேலும் மூன்று ஸ்கார்பீன் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

மோடி - மேக்ரான் உச்சிமாநாட்டிற்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டு  அறிக்கையில் 26 ரபேல்-மரைன் போர் விமானங்களுக்காக ஒப்பந்தம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ரபேல் ஜெட் விமானங்கள் மற்றும் ஸ்கார்பீன் டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 80,000 கோடி ரூபாய் (கிட்டத்தட்ட 9 பில்லியன் யூரோ) ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சகத்தால் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Tap to resize

Latest Videos

ஆஸி.,யில் இந்திய மாணவரை இழுத்துச் சென்று இரும்புக் கம்பியால் தாக்கிய காலிஸ்தான் பிரிவினைவாதிகள்

இந்தத் திட்டம் குறித்த வரைபடத்தை இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) மற்றும் பிரெஞ்சு நிறுவனமான சஃப்ரான் ஆகியவை இணைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிக்கும். இந்தியாவும் பிரான்சும் போர் விமான இயந்திரத்தின் கூட்டு வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மேம்பட்ட விமான தொழில்நுட்பங்களில் தங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகின்றன.

உள்நாட்டில் தேஜாஸ் மார்க்-2 போர் விமானங்களை இயக்குவதற்கு பயன்படும் GE-414 ஜெட் எஞ்சினின் கூட்டுத் தயாரிப்பில் அமெரிக்கா 80% தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், பிரான்ஸ் 100% தொழில்நுட்ப பரிமாற்ற ஒத்துழைபபை வழங்குகிறது.

இதன்படி, மூன்று புதிய ஸ்கார்பீன் (Scorpene) நீர்மூழ்கிக் கப்பல்களுக்காக மும்பையைச் சேர்ந்த  மசாகன் டாக்ஸ் (Mazagon Docks) கடற்படைக் குழு, பிரான்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 23,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரெஞ்சு கடற்படைக் குழுவுடன் இணைந்து மசாகன் உள்நாட்டிலேயே நீர்மூழ்கிக் கப்பல்களைத் தயாரிக்க உள்ளது.

"இந்திய நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அதன் செயல்திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்களை ஆராய இந்தியாவும் பிரான்சும் தயாராக உள்ளன" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

5.4 வினாடியில் 100 கி.மீ வேகத்தில் பறக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார்! விலை எவ்வளவு தெரியுமா?

click me!