சிங்கப்பூர் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஈஸ்வரன் ஜாமீனில் விடுதலை! CPIB

By Dinesh TG  |  First Published Jul 15, 2023, 11:19 AM IST

போக்குவரத்து அமைச்சர் S.ஈஸ்வரன் கடந்த செவ்வாய்க்கிழமை (11 ஜூலை) ஊழல் விசாரணையில் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும் லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
 


சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், இந்திய வம்சாவளித் தலைவர் ஒருவர் மீது ஊழல் தடுப்பு விசாரணையை எதிர்கொண்டதால், நாட்டின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனை விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தியதாக தெரிவித்தார். ஊழல் நடைமுறைகள் புலனாய்வுப் பணியகம் (சிபிஐபி) ஒரு வழக்கைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.

ஈஸ்வரன், ஜாமீனில் விடுவிக்கப்படுதைவயொட்டி அவரை விடுவிக்கும் நிபந்தனைகளில் ஒரு பகுதியாக ஈஸ்வரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தான் கண்டுபிடித்த விவகாரத்தின் அடிப்படையில் ஈஸ்வரன் விசாரணையில் முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்துள்ளது.

தற்போது CNA செய்தி நிறுவனம் கேட்டிருந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு, ஈஸ்வரன் தொடர்புடைய விசாரணையில் Hotel Properties Limited நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஓங் பெங் செங்கிற்குக் (Ong Beng Seng) கைது நடவடிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் மீது ஊழல் புகார்.. யார் இந்த சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன்?

அதைத்தொடர்ந்து, ஒங் பெங் செங்கும் கைதுசெய்யப்பட்டார். வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக கூறிய ஓங்-கிற்கு 100,000 சிங்கப்பூர் டாலர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.அவர் மீண்டும் சிங்கப்பூர் திரும்பியவுடன், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று லஞ்ச ஊழல் பிரிவு தெரிவித்துள்ளது. .

ஈஸ்வரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதற்கான பிணைத்தொகை பற்றிய விவரங்களை லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு வெளியிடவில்லை. மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

ஸ்டீராய்டு ; அதிம் உள்ள 4 பொருட்களுக்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை தடை!

click me!