பிரான்ஸ் பயணம் முடித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றார் பிரதமர் மோடி!!

By Dhanalakshmi G  |  First Published Jul 15, 2023, 10:57 AM IST

பிரதமர் மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று காலை ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு புறப்பட்டுச் சென்றார்.
 


பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு நாட்களாக பிரான்சில் அரசு முறை பயணம் மேற்கொண்டு இருந்தார். இந்தப் பயணத்தில் இந்தியா, பிரான்ஸ் இடையே பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இந்தப் பயணத்தில் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமருக்கு வழங்கப்பட்டது. அந்த நாட்டின் தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக நேற்று மோடி கலந்து கொண்டு இருந்தார். 

பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்வதாக வெளி விவகாரத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தனது பதிவில், பிரதமர் மோடி வெற்றிகரமாக தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார். இந்தப் பயணத்தில் இந்தியா பிரான்ஸ் இடையே புதிய அத்தியாயம் துவங்கியுள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos

undefined

இன்று அபுதாபியில் ஒரு நாள் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, எரிவாயு, உணவு பாதுகாப்பு, ராணுவம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவார் என்றும் இதுதொடர்பாக இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மற்றும் வர்த்தக உறவுகள் ஏற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அபுதாபி அதிபரும், ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உடன் இன்று பிரதமர் மோடி பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். 

பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு செல்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி தனது அறிக்கையில், ''எனது நண்பரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவரும், அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பரிசளித்து அசத்திய மோடி - லிஸ்ட் ரொம்ப பெருசு !!

"எங்கள் இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடுகள், எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, ஃபின்டெக், பாதுகாப்பு, ராணுவம் மற்றும் வலுவான மக்களிடையேயான உறவுகள் போன்ற பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு, ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் மற்றும் நானும் எங்கள் கூட்டாண்மையின் எதிர்காலம் குறித்த ஒரு வரைபடத்தை ஒப்புக்கொண்டு இருந்தோம். மேலும் எங்களது உறவுகளை மேலும் ஆழப்படுத்துவது எப்படி என்பதை அவருடன் விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டு இருந்தார். 

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த ஆண்டின் இறுதியில் UNFCCC (COP-28) -ன் 28வது மாநாட்டை நடத்தவுள்ளது. இந்த மாநாட்டில் எரிசக்தி மாற்றம், பாரிஸ் ஒப்பந்தம் செயல்படுத்துதல், பருவநிலை நடவடிக்கையை துரிதப்படுத்துவதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதை எதிர்நோக்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

click me!