பாகிஸ்தானில் நடந்த பேரணியில் துப்பாக்கிச் சூடு... முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உள்பட பலர் காயம் என தகவல்!!

By Narendran S  |  First Published Nov 3, 2022, 5:21 PM IST

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கண்டெய்னர் அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் இம்ரான் கானின் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 


பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவருமான இம்ரான் கான் அணிவகுப்பு சென்றிருந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இதில் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற பேரணியின் போது கன்டெய்னரில் ஏற்றப்பட்ட டிரக் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதையும் படிங்க: சோப்பு போட்டு துணி துவைக்கும் குரங்கு... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Tap to resize

Latest Videos

இதில் இம்ரான் கான் காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டார். அவர் யார் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. இம்ரான் கான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: இஸ்ரேலின் அடுத்த பிரதமராகிறார பெஞ்சமின் நெதன்யாகு: 90 சதவீத வாக்குகள் எண்ணிக்கையில் உறுதி

கிழக்கு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள வசிராபாத் மாவட்டத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. கான் தனது பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தும் நோக்கில், தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி ஒரு பெரிய டிரக்குகள் மற்றும் கார்களில் பயணம் செய்தார். அப்போது தான் இந்த தாக்குதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 

Imran Khan was shot in the leg but was stable while being taken to hospital. He waived at supporters too. pic.twitter.com/XizoAQzPax

— PTI (@PTIofficial)
click me!