பட்டும் திருந்தாத பாகிஸ்தான்.. விருந்தாளியா அழைக்கும் நாட்டில் கடன் கேட்கப்போகும் இம்ரான் கான்.

By Ezhilarasan Babu  |  First Published Jan 31, 2022, 5:54 PM IST

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், புதிதாக வரும் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியே, புதிதாக வரும் அரசு அமெரிக்காவிற்கு சாதகமாக நடந்து கொள்ளும் அரசாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானுக்கு பணத்தை கொடுத்துவிட்டு எப்படி திரும்ப பெற முடியும் என்ற கேள்வி சீனாவிடம் இருந்து வருவதே இதற்கு காரணம்.  


பட்ட கடனை திருப்பிக்கொடுக்க வழியில்லாமல் தவித்து வரும் நிலையில், மீண்டும் அதே சீனாவிடம் 3 பில்லியன் டாலரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடன் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  சீனாவின் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி துவக்க விழாவில் கலந்து கொள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சீன அதிபர் ஜீ ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இம்ரான்கான் கடன் கேட்க திட்டம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆசிய கண்டத்தில் அசைக்கமுடியாத சக்தியாக உருவாகும் கனவில் சீனா தனது எல்லையோர நாடுகளை வலையில் வீழ்த்தி அதன் மூலம் தன் காரியத்தை சாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இலங்கைக்கு கடன் கொடுத்த அதை வட்டியும் முதலுமாக வசூலித்து தற்போது அந்நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தானையும் கடனாளி ஆக்கி தனது காலடியில் வைத்துக்கொள்ள சீனா வகுத்த வியூகம் பலன் கொடுக்க தொடங்கியுள்ளது. சீனா பெல்ட் அண்ட் ரோடு (சீனா பாகிஸ்தான் பட்டுப்பாதை திட்டம்) என்ற திட்டத்தில் பாகிஸ்தானையும் இணைத்து பாகிஸ்தானுக்கு அதிக அளவில் கடன்களை கொடுத்துள்ளது சீனா. அந்த திட்டத்திற்கு செலவாகும் தொகையில் 50% சீனாவும், 50% பாகிஸ்தானும் கொடுக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

பாகிஸ்தானிடம் திட்டத்திற்கான தொகை இல்லை என்பதால், அதனை சீனா கடனாக கொடுத்துள்ளது. சீனாவின் இந்த திட்டத்திற்கு பாகிஸ்தானில் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதேபோல் இத்திட்டத்தில் ஈடுபட்டிருந்த சீனா பொறியாளர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தால் சீனாவிற்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதில் 50 சதவீத தொகையை பாகிஸ்தான் திருப்பி தரவேண்டும் என்றும் சீனா நிர்பந்தித்து வருகிறது. இதனால் பாகிஸ்தான் கடன் வலையில் சிக்கியுள்ளது. பட்ட கடனை அடைப்பதற்கு வழியின்றி தவித்து வரும் பாகிஸ்தான், தங்களது நாட்டில் உள்ள கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து கடன் பாக்கியை ஈடுகட்ட முயற்சித்து வருகிறது. ஆனால் இன்னும் பெரிய அளவிலான கடன் பாக்கி இருப்பதால் மீள முடியாத நிலையில் பாகிஸ்தான் தவித்து வருகிறது.

இதனால் அந்த நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சவுதி அரேபியா விடமிருந்து 3 பில்லியன் டாலரை பாகிஸ்தான் கடனாக பெற்றுள்ள நிலையில், பிப்ரவரி 3ஆம் தேதி சீனா செல்லும் பிரதமர் இம்ரான்கான் சீனாவிடம் 3 பில்லியன் டாலரை கடனாக கேட்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி தொடங்கவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவுக்காக இம்ரான்கான் விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் இந்த திட்டத்தை வைத்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பாகிஸ்தான் எக்ஸ்பிரஸ் ட்ரிபியுன்  நாளிதழ் ஞாயிற்றுக்கிழமை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதில் இம்ரான் கானின் சீன பயணம் குறித்தும் அந்த பயண திட்டம்  குறித்தும் முக்கிய தகவல்கள் அதில் இடம்பெற்றுள்ளது. சீனாவுக்கு இம்ரான்கானுடன் 6 அமைச்சர்கள் செல்லவுள்ளதாகவும், பிப்ரவரி 3ஆம் தேதி முதல் அவர்கள் சுற்றுப் பயணம் தொடங்குகிறது என்றும் அதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் இம்ரானும் ஜி ஜின்பிங் சந்திப்பு இன்னும் உறுதியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.

அதாவது பட்டுப்பாதை திட்டத்தில் பாகிஸ்தான் மீது ஏற்கனவே கோபத்தில் உள்ள சீனா, அந்நாட்டின் பிரதமரை நேருக்கு நேர் சந்திப்பதற்கு விரும்பவில்லை என கூறப்படுகிறது. ஒருவேளை ஜி ஜின்பிங் கை சந்திக்க முடியவில்லை என்றால் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை இம்ரான்கான் சந்திக்க திட்டம் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 2018 இல் இம்ரான் ஆட்சிக்கு வந்த பிறகு சீனாவிடம் இருந்து 11 பில்லியன் டாலர்கள் கடனாக பெறப்பட்டுள்ளது. தற்போது அதற்கு வட்டி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. அசல் தொகை இன்னும் திருப்பி தரப்படவில்லை. இந்நிலையில் 4 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டு கையிருப்பாக பாகிஸ்தான் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்த பணத்தை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு சீனாவும் 3 பில்லியன் டாலர் கடன் கொடுக்கும் என்பதை உறுதியாகவும் கூற முடியாது. ஏனெனில் பாகிஸ்தானில் ஏற்கனவே அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. மார்ச் மாதத்திற்குள் அங்கு ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.

அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், புதிதாக வரும் அரசின் அணுகுமுறை எப்படி இருக்கும் என்பதும் பெரும் கேள்விக்குறியே, புதிதாக வரும் அரசு அமெரிக்காவிற்கு சாதகமாக நடந்து கொள்ளும் அரசாக இருக்கும் பட்சத்தில், பாகிஸ்தானுக்கு பணத்தை கொடுத்துவிட்டு எப்படி திரும்ப பெற முடியும் என்ற கேள்வி சீனாவிடம் இருந்து வருவதே இதற்கு காரணம்.  பாகிஸ்தானிடம் தற்போது 16.1 பில்லியன் டாலர் அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது ஆனால் இதை தொழில்நுட்ப ரீதியாக அந்நிய செலாவணி இருப்பு என்று கூறமுடியாது. சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய நாடுகளிலிருந்து அந்த பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதை அவர்கள் எந்த நேரத்திலும் திரும்பப் பெறக் கூடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் பாகிஸ்தான் திவாலாகும் சூழல் ஏற்படும். இந்நிலையில் ஏற்கனவே சவுதி அரேபியா கொடுத்த கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என கெடு விதித்துள்ளது. இதேபோல் சீனாவும் கடனை திருப்பி கேட்டு வரும் நிலையில் சீனா அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்நிலையில் மீண்டும் சீனாவிடம் 3 பில்லியன் டாலர் அவரை கடன் கேட்க உள்ளது பாகிஸ்தான் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 
 

click me!