ஒரே மாதத்தில் 7 ஏவுகணை சோதனை... வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்!!

By Narendran S  |  First Published Jan 30, 2022, 10:01 PM IST

வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 


வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால்,  உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது. இதனிடையே வடகொரியா அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே மீண்டும் மோதல் உச்சகட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Tap to resize

Latest Videos

நாங்கள் அணுசக்தி திறன்களை ஓரளவு நிறுத்தி வைப்பதற்கு பதிலாக, எங்கள் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்காவிடம் வடகொரியா கூறியது. அதை அமெரிக்கா ஏற்கவில்லை இந்த நிலையில், தற்போது புத்தாண்டு பிறந்தது முதல் வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர் சோனிக் ஏவுகணை சோதனை நடத்தியதை தொடர்ந்து வடகொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனாலும் வடகொரியா அடங்கவில்லை. இந்தநிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.  ஒரே மாதத்தில் வடகொரியா நடத்தும் 7வது சோதனை இதுவாகும்.  

800 கி.மீட்டர் தொலைவு இந்த ஏவுகணை பறந்து கடலில் விழுந்ததாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு  வடகொரியா சோதித்து பார்க்கும் மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணை இதுவாகும் என சொல்லப்படுகிறது. 2022 தொடங்கிய ஒரே மாதத்தில் மிகவும் சக்திவாய்ந்த, அதிவேக ஏவுகணை சோதனையை வடகொரியா வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளது. ஏவுகணை சோதனைக்கு ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்தாலும் இம்மாதத்தில் 7 சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது. வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்தி வரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பதற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் வடகொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

click me!