தலிபான்களை தலையில் வைத்து கொண்டாடும் இம்ரான்கான்.. அடிமைத்தனத்தின் சங்கிலி உடைபட்டதாக பெருமிதம்.

By Ezhilarasan Babu  |  First Published Aug 16, 2021, 6:55 PM IST

இந்நிலையில் தான் அதுவரை மௌனம் காத்து வந்த , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திங்களன்று ஆப்கானியர்கள் "நாட்டில் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைத்துவிட்டனர்" என்று கூறி புழங்காகிதம் அடைந்துள்ளார். 


ஆப்கானிஸ்தானின் தலிபான் கிளர்ச்சியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தலைநகர் காபூலுக்குள் நுழைந்தனர். அவர்கள் வருகை பற்றிய செய்தி நாட்டு மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல் பரவியது, ஒட்டுமொத்த நகரமும் பீதியடைந்தது. எல்லா இடங்களிலும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டது, மக்கள் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுப்பதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைக்க வேக வேக வீடுகளுக்கு விரைந்தனர். ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி பிற்பகலில் நாட்டை விட்டே வெளியேறினார், 

ஏனெனில், முக்கிய நகரங்கள் அனைத்துமே தலிபன்களிடம் விழுந்துவிட்டது, இதனால் பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் தங்கள் தூதரகங்களை காலி செய்துவிட்டு தயாராக இருந்த விமானங்களில் பறக்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர், அல்லது சிலர் விமான நிலையத்தை நோக்கி ஓடிக்கொண்டருந்தனர். அதுவரை மக்களுக்கு நம்பிக்கை பாய்ச்சிக் கொண்டிருந்த கனி எங்கு செல்கிறார், அல்லது ஆப்கானிஸ்தான் முழுவதும் தீவிரவாத இஸ்லாமியக் குழு தொடர்ந்து வேகமாக படர்ந்ததை அடுத்து, அதிகாரம் எவ்வாறு மாற்றப்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. குழப்பமாகவே உள்ளது. 

Tap to resize

Latest Videos

இதற்கிடையில், இந்தியா தனது நூற்றுக்கணக்கான அதிகாரிகள் மற்றும் குடிமக்களை காபூலில் இருந்து வெளியேற்ற தயாராகி வருகிறது. இந்திய விமானப்படையின் சி -17 குளோப்மாஸ்டர் இராணுவப் போக்குவரத்து விமானங்கள் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பல்வேறு நாடுகள் தங்கள் குடிமக்களை ஆப்கனில் இருந்து பத்திரமாக மீட்டுச் செல்ல தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் தான் அதுவரை மௌனம் காத்து வந்த , பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திங்களன்று ஆப்கானியர்கள் "நாட்டில் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை உடைத்துவிட்டனர்" என்று கூறி புழங்காகிதம் அடைந்துள்ளார். அமெரிக்க ஆதரவு ஆப்கானிஸ்தான் அரசாங்கம் வீழ்ச்சியடைந்து, ஜனாதிபதி அஷ்ரப் கானி நாட்டை விட்டு தப்பியோடினார். "நீங்கள் ஒருவரின் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்ளும்போது, ​​அது உயர்ந்தது என்று நீங்கள் நம்புகிறீர்கள், நீங்கள் அதற்கு அடிமையாகிவிடுகிறீர்கள். உங்கள் மனதை மன அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பது மிகவும் கடினம். ஆனால்  ஆப்கானியர்கள் அடிமைத்தனத்தின் பிணைப்பை உடைத்துவிட்டனர்" என்று இம்ரான் கான் கூறியுள்ளார். 

ஆப்கனிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த மோசமான நிலைமைக்கு பாகிஸ்தான் முக்கிய காரணம் என அந்நாட்டு பெண்கள் பாகிஸ்தானையும் அந்நாட்டு அரசையும் சபித்து வருகின்றனர். போராளி குழுக்களை உருவாக்கி அவைகளுக்கு ஆயுதங்களை கொடுத்து வன்முறைக்கு வித்திட்டதும் பாகிஸ்தான்தான், தலிபான்களுக்கு ஆயுதம் வழங்கி ஆப்கனிஸ்தானின் சுதந்திர காற்றில் நச்சு தூவியதும் பாகிஸ்தான் தான் என்றும், எங்கள் பாவம் பாகிஸ்தானை அழிக்காமல் விடாது என்று அந்நாட்டு பெண்கள் குமுறி வருகின்றனர். இந்நிலையில் இம்ரான்கான் தலிபான்களின் வெற்றியை கொண்டாடும் வகையில் கருத்து கூறிஉள்ளது. ஆப்கன் மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. 

இந்நிலையில், அண்டை நாடான ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதிக்க திங்கள்கிழமை இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தானின் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது. அதில், வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி  அடுத்த வாரம் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்த ஆப்கனிஸ்தான் செல்வார் என அறிவித்துள்ளார். 
 

click me!