பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஹெலிகாப்டருடன் ஆப்கானிஸ்தானை விட்டு தப்பிய அதிபர் அஷ்ரப் கானி..!

By Thiraviaraj RMFirst Published Aug 16, 2021, 6:07 PM IST
Highlights

ஹெலிக்காப்டரில் திணிக்கப்பட முடியாத மீதமிருந்த பணத்தை அப்படியே விட்டுச் செல்லப்பட்டதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.  

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தி வருகிறார்கள் தலிபான்கள். அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தலிபான்கள் தேடி வருகிறார்கள். 

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தானை விட்டு அதிபர் அஷ்ரப் கானி தப்பிச் சென்றபோது, பணத்தால் நிரப்பப்பட்ட 4 கார்கள், ஒரு ஹெலிகாப்டருடன் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது நாட்டை விட்டு தப்பிச் சென்றதாகவும், ஹெலிக்காப்டரில் திணிக்கப்பட முடியாத மீதமிருந்த பணத்தை அப்படியே விட்டுச் செல்லப்பட்டதாகவும் காபூலில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

 

முன்னதாக, ‘’என் நாடு ரத்தக் களரி ஆவதை தவிர்க்கவே அதிபர் பதவியிலிருந்து விலகினேன், நாட்டை விட்டு வெளியேறுவது அல்லது தலிபான்கள் வன்முறை என்ற இரு கடினமான தேர்வுகளை கடந்தேன். 20 ஆண்டுகளாக நாட்டை பாதுகாக்க என் வாழ்நாளையே அர்ப்பணித்தேன்.

மக்கள்தான் முக்கியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்தேன். நாட்டின் செழிப்பு, மரியாதையை காக்க இனி தலிபான்கள்தான் பொறுப்பு’’என ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்து இருந்தார். 

click me!