ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தி வருகிறார்கள் தலிபான்கள். அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தலிபான்கள் தேடி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வீடு வீடாக சோதனை நடத்தி வருகிறார்கள் தலிபான்கள். அரசியல் தலைவர்கள், போர் வீரர்களின் குடும்பங்கள், பத்திரிகையாளர்களை தலிபான்கள் தேடி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறுகையில், ‘’ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதனால் ஏற்பட்ட கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டு உள்ளனர். மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்து உள்ளார்கள். அது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். தலிபான்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர். எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கான் மக்கள் வெள்ளை மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “பைடன் எங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டார். அவர்தான் இதற்குக் காரணம். தலிபான்கள் மீண்டும் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளார்கள். ஆப்கானியர்கள் மீண்டும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு அமைதி வேண்டும். எங்களால் நிம்மதியாக உறங்க முடியவில்லை”என்ற முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.