ஏற்கனவே ஐஐடி மெட்ராஸ் zanzibar நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது டெல்லி IIT அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ளது
அபுதாபியில் IIT டெல்லியின் ஒரு வளாகத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி-டி) இன்று கையெழுத்திட்டது. தனது அரசு பயணமாக பாரிஸ் நகரில் இருந்து அமீரகம் சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
A historic moment! pic.twitter.com/gRd9a2XDx6
— Dharmendra Pradhan (@dpradhanbjp)இந்த புதிய புரிந்துணர்வு ஒப்பந்தமானது ‘IITs go Global’ முயற்சியின் அடுத்த படி என்றே கூறலாம். ஏற்கனவே ஐஐடி மெட்ராஸ் zanzibar நாட்டில் அமைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தற்போது டெல்லி IIT அபுதாபியில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, யுஏஈ வர்த்தகத்திற்கு இரு நாடுகளின் நாணயங்கள் பயன்படுத்த பிரதமர் மோடி முன்பு ஒப்பந்தம்!!
கிடைத்திருக்கும் அறிக்கைகளின்படி, இந்த புதிய வளாகத்தில் முதுகலை படிப்புகள் வரும் ஜனவரி 2024 முதலும், மற்றும் இளங்கலை படிப்புகள் அடுத்த ஆண்டு செப்டம்பர் முதலும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. "ஐஐடி டெல்லியின் அபுதாபி வளாகம் அறிவின் ஆற்றலை மேம்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும்" என்று இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
கடந்த "பிப்ரவரி 18, 2022 அன்று வெளியிடப்பட்ட இந்தியா-யுஏஇ கூட்டு தொலைநோக்கு அறிக்கையின்படி, இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான மெய்நிகர் உச்சிமாநாட்டிற்குப் பிறகு, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவ தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்" என்பதும் குறிப்பிடத்தக்கது.