#UnmaskingChina:சைலண்டாக சீனாவை சுற்றிவளைத்த அமெரிக்கப் படைகள்.. கூட்டாளிகளான வடகொரியா, பாகிஸ்தானுக்கும் செக்.

By Ezhilarasan BabuFirst Published Jun 27, 2020, 12:27 PM IST
Highlights

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போராக மாறுவதற்குகூட வாய்ப்பிருக்கிறது என பல்வேறு சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கணித்து வருகின்றனர்.  

இந்தியா-சீனா இடையே ஏற்பட்டுள்ள மோதல் மூன்றாம் உலகப் போராக மாறுவதற்குகூட வாய்ப்பிருக்கிறது என பல்வேறு சர்வதேச அரசியல் நோக்ககர்கள் கணித்து வருகின்றனர்.  தென்சீனக்கடல் தொடங்கி லடாக் எல்லை வரை சீனாவின் ஆதிக்கம் விரிவடைந்து வரும் நிலையில்,  சீனாவின் ஆக்கிரமிப்பு கொள்கைகளை வெளிப்படையாக விமர்சிக்கும் முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த வகையில் கிழக்கு லடாக்  எல்லையில், சீனாவின் அத்துமீறலை அமெரிக்கா எச்சரித்துள்ளது. இந்தியா, மலேசியா, இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு சீன ராணுவத்தின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், சீனாவை எதிர்கொள்வதற்கான ஆற்றல் எந்த அளவிற்கு உள்ளது என்பதை மறு ஆய்வு செய்ய உள்ளதாக  அமெரிக்கா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தனது படைகளை குறைத்து அதை ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளில் நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், அந்நாடு அறிவித்துள்ளது. 

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் சீனா வேகமாக ராணுவம் மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது. இது பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதுடன், சீன ராணுவத்தின் ஆதிக்கம் பல நாடுகளுக்கு கவலையை அதிகப்படுத்தியுள்ளது. சீனா தற்போது தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக்கடல் இரண்டிலும் ஆதிக்கத்தை செலுத்தி வருவதுடன், அண்டை நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தென்சீன கடல்பிராந்தியத்தில் உள்ள தீவுகளை ஆக்கிரமித்து அதை இராணுவ மயமாக்கி வருகிறது. இந்திய-சீன கிழக்கு, வடக்கு எல்லையை பொருத்தவரையில் தொடர்ந்தது ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் சீனா ஈடுபட்டு வருகிறது என மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.  இந்தியா, சீனா இடையே போர் ஏற்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு  ஆதரவாக களமிறங்கும், அப்படியெனில் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். பின்னர் பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் சீனாவுக்கு பக்கபலமாக முன்வர கூடும், அதேநேரத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஓரணியில் திரளும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் ரஷ்யா தன்னுடைய பழைய நண்பனான இந்தியாவுக்கு ஆதரவு தெரிவிப்பதா, அல்லது நட்பு பாராட்டி வரும் சீனாவுக்கு ஆதரவு தெரிவிப்பதா என்ற குழப்பத்திற்கு தள்ளப்படும் என சர்வதேச நாளேடுகள் கணித்துள்ளன. 

ஆனால் ஒரு போரைத் தவிர்த்து, உலக நாடுகள் ஒன்றிணைந்து சீனாவை கேள்வி எழுப்ப வேண்டும் என்ற கருத்துக்களும் மேலோங்கி வருகிறது. ஆனால் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோவின் கருத்து சீனாவை சுற்றி வளைக்க அமெரிக்கா திட்டமிட்டு இருப்பதை வெளிபடுத்துகிறது. 1988-ஆம் ஆண்டே அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டுள்ளது. அதே நேரத்தில் வியட்நாமும் சீனாவின் அச்சுறுத்தலால் அமெரிக்காவுடன் நெருக்கத்தை அதிகப்படுத்தியுள்ளது, மேலும் அதன் கடலோர பகுதியை பாதுகாப்பதில் அமெரிக்க கடற்படையின் ஆதரவை வியட்நாம் பெற்றுவருகிறது,  அதேநேரத்தில் இந்தோனேசியா மற்றும் மலேசியா உடனான அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பும் வலுபடுத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் விமானம் மற்றும் கடற்படைத் தளத்தை அமெரிக்கா எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ இருப்பை அதிகரித்தால் நிச்சயம் சீனா சுற்றிவளைக்கப்பட வாய்ப்புள்ளது. இதை எண்ணி தென் சீனக்கடல் பிராந்தியத்திலும், கிழக்கு சீனக்கடலிலும் சீனா மிகவும் ஆக்ரோஷமாக தனது கோபத்தை வெளிபடுத்தி வருகிறது. உதாரணமாக தைவானுக்கு தனது போர் விமானங்களை அனுப்பி வெளிப்படையாக அச்சுறுத்தி வருகிறது. ஆனால் தைவான் அந்த நடவடிக்கைகளை முறியடித்துவருகின்றது. மேலும் அமெரிக்க ராணுவத்திற்கு தைவானில் ஒரு நிரந்தரமான விமானத்தளம் இல்லை, ஆனால் பெரும்பாலும் பயிற்சி ரோந்து உள்ளிட்டவைகளுக்காக மட்டுமே அமெரிக்கப் போர் விமானங்கள் அங்கு வந்து செல்கின்றன.  

எனவே  3 அமெரிக்க போர் விமானம் தாங்கிகள் தைவானுக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவையும் அதன் நட்பு  நாடுகளான வடகொரியா போன்றவற்றையும் சமாளிக்க அமெரிக்கா தென்கொரியாவிலும், ஜப்பானிலும் தனது இராணுவத் தளத்தை உருவாக்கி உள்ளது. தென்கொரியாவில் விமானப்படை மற்றும் கடற்படையில் சுமார் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ துருப்புகள் ஏற்கனவே நிலை நிறுத்தப்பட்டுள்ளன, இந்த பிராந்தியத்தில் சுமார் 15 சிறிய மற்றும் பெரிய அமெரிக்க ராணுவ தளங்கள் உள்ளன. அதேபோல் ஜப்பானிலும் அமெரிக்காவின் 23 சிறிய மற்றும் பெரிய ராணுவ தளங்கள் உள்ளன. அங்கு சுமார் 54 ஆயிரம் வீரர்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். 50 போர்க் கப்பல்கள் மற்றும் 20,000 கடற்படை வீரர்களை கொண்ட அமெரிக்காவின் ஏழாவது பெரிய கடற்படை எப்போதும் ஜப்பானில் தயாராக உள்ளது. தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து சுமார் 5 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் குவாம் என்ற சிறிய தீவில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன. அது அமெரிக்க விமானப்படை தளமாகவும் உள்ளது. எனவே இத்தியா- சீனா இடையே போர் ஏற்படும் பட்சத்தில் சீனா சுற்றிவளைக்கப்படும் என என இந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 

click me!