பெண்கள் நடத்தும் சம உரிமை போராட்டம் - அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய ஐஸ்லாந்து பிரதமர் கேத்ரின்!

By Ansgar R  |  First Published Oct 24, 2023, 4:37 PM IST

ஐஸ்லாந்தின் பிரதம மந்திரி கத்ரின் ஜகோப்ஸ்டிட்டிர், இன்று செவ்வாயன்று, நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்களுடன் இணைந்து "பாலின ஊதிய இடைவெளி" மற்றும் "பாலின அடிப்படையிலான வன்முறைக்கு" எதிர்ப்புத் தெரிவித்து நடக்கும் போராட்டத்தில் காணலந்துகொண்டார். 


கடந்த 1975ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, பெண்கள் இதுபோல வேலைநிறுத்தம் செய்து போராடுவது இதுவே முதல் முறை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பெண்களின் இந்த போராட்டத்தில் அவர்களுடன் இணைந்து போராட அந்நாட்டு பிரதமர் கேத்ரின் அவர்களும் களமிறங்கியுள்ளது அந்த பெண்களுக்கு பெரும் வலுசேர்த்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் கேத்ரின் வெளியிட்ட பதிவில் "அமைச்சரவையில் உள்ள அனைத்து பெண்களும் என்னை போல போராட்டத்தில் இறங்குவார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன், நான் இந்த நாளில் வேலை செய்ய மாட்டேன்" என்று கேத்ரின் தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையின் தலையை துண்டித்த ஹமாஸ் தீவிரவாதிகள்!

பாரம்பரியமாக ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளுடன் ஒப்பிடுகையில், பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் தொழில்கள் எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பதை தனது அரசாங்கம் கவனித்து வருவதாக பிரதமர் கூறினார். நாங்கள் இன்னும் முழு பாலின சமத்துவத்திற்கான எங்கள் இலக்குகளை அடையவில்லை, மேலும் பாலின அடிப்படையிலான ஊதிய இடைவெளியை நாங்கள் இன்னும் சமாளிக்கிறோம், இது 2023 இல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அவர் கூறினார். 

ஐஸ்லாந்தின் மிகப் பெரிய பொதுத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, ஐஸ்லாந்தில் உள்ள பொதுத் தொழிலாளர் சங்கத்தின் கூட்டமைப்பு (பிஎஸ்ஆர்பி), ஐஸ்லாந்திய செவிலியர் சங்கம் மற்றும் ஐஸ்லாந்திய மகளிர் சங்கங்களின் சங்கம் மற்றும் பிற தொழிலாளர் அமைப்புகளுடன் இணைந்து இந்த போராட்டத்தை ஆதரித்துள்ளதாக CNA அறிக்கை தெரிவித்துள்ளது. .

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D 

ஐஸ்லாண்டிக் ஆசிரியர் சங்கத்தின் கூற்றுப்படி, 94 சதவீத மழலையர் பள்ளி ஆசிரியர்கள் உட்பட, கல்வி முறையின் ஒவ்வொரு மட்டத்திலும் பெண்கள் பெரும்பான்மையாக உள்ளனர். நாட்டின் மிகப்பெரிய ஐஸ்லாந்தின் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையில் கிட்டத்தட்ட 80 சதவீத தொழிலாளர்கள் பெண்கள் என்றும் அது கூறியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து இலங்கை செல்ல இனி விசா தேவையில்லை!

click me!