கடந்த வாரம் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்திற்கு மேலே புயல் நிறைந்த வானத்தில் பறந்து கொண்டிருந்த இரண்டு விமானங்கள், ஒன்றுடன் ஒன்று மோதிகொள்ளாமல் நூலிழையில் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இன்று திங்கட்கிழமை போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சென்ற அதே நேரத்தில், அதே விமான நிலையத்தில் இருந்து ஸ்கைவெஸ்ட் விமானம் ஒன்று மேலே ஏற துவங்கியுள்ளது. அப்போது சுமார் 500 அடி வித்தியாசத்தில், விமானிகளின் சாமர்த்தியத்தால் பெரும் மோதல் தடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு விமானங்களும் ஒன்றுக்கொன்று தோராயமாக 250 செங்குத்து அடிகளுக்குள் வந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) படி, விமானங்கள் ஒன்றுக்கொன்று 500 அடிக்கும் குறைவாக இருக்கும்போது நடுவானில் மோதும் அளவிற்கு சென்றுள்ளது.
இந்த சம்பவத்தை இப்போது விசாரித்து வரும் FAA, அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் பைலட் தரையிறங்க தயாராகினர் என்றும், ஆனால் அது கிட்டத்தட்ட ஸ்கைவெஸ்ட் விமானத்துடன் மோதும் நிலைக்கு வந்ததும், சட்டென்று அலாஸ்கா விமான பைலட் விமானத்தை தரையிறக்கம், மேலே ஏற்றியுள்ளார். இது தான் பெரும் விபத்தை தடுத்துள்ளது.
ஒரு தனியார் யூடியூப் சேனல் வெளியிட்ட கிளிப்பில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டில் இருந்த பேசும் ஒரு நபரின் ஆடியோ, அலக்சா விமானம் மற்ற விமானத்துடன் நடுவானில் ஆபத்தான முறையில் நெருங்கியபோது திசையை மாற்றும்படி எச்சரிக்க முயன்று பீதியடைந்ததுள்ளார். இறுதியில் இரு விமானிகளின் சாதுர்யமான செயல்பட்டால் பெரும் விபத்து தடுக்கப்பட்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
உண்மையில் இரு விமானிகளின் சாதுர்யத்தால் பெரும் விபத்து ஒன்று தடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.