"வருகிறது 3ம் உலகப்போர்" நான் தயார், நீ தயாரா..? கெத்து காட்டும் உக்ரைன் அதிபர் !!

Published : Mar 21, 2022, 07:16 AM IST
"வருகிறது 3ம் உலகப்போர்" நான் தயார், நீ தயாரா..? கெத்து காட்டும் உக்ரைன் அதிபர் !!

சுருக்கம்

தலைநகர் கீவ், கார்கிவ், மரியுபோல் உள்ளிட்ட அனைத்து உக்ரைன் நகரங்களிலும் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் பெரும்பாலான நகரங்கள் உருக்குலைந்து உள்ளன. ரஷிய ராணுவத்துக்கு எதிராக உக்ரைன் வீரர்கள் கடுமையாக போரிட்டு வருகிறார்கள். 

தீவிரமடையும் தாக்குதல் :

உக்ரைன் ராணுவத்தினரின் செயல் பாட்டை தடுக்கும் வகையில் ரஷியாவின் தாக்குதல் இருந்தது. பின்னர் அரசு கட்டிடங்கள், குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தினர் கடும் சவால் அளித்து வருவதால் ரஷியா மீண்டும் உக்ரைனின் ராணுவ தளங்கள் மீது தாக்குதலை தொடங்கி உள்ளது.

கிழக்கு உக்ரைனில் உள்ள துறைமுக நகரமான மரியுபோலில் ரஷிய ராணுவத்தின் தாக்குதல் சில நாட்களாக மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. அந்நகரம் மீது தொடர்ந்து ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மரியுபோல் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது. அங்குள்ள பெரும்பாலான கட்டிடங்கள் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் மரியுபோல் நகருக்குள் ரஷியாவின் பெரும் படைகள் நுழைந்துள்ளது.

அந்நகர தெருக்களில் ரஷிய பீரங்கிகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. மேலும் ரஷிய படைக்கும் உக்ரைன் வீரர்களுக்கும் இடையே தெருக்களில் கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. அங்குள்ள எக்கு ஆலையில் இரு ராணுவத்தினர் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. மரியுபோல் நகருக்குள் ரஷிய படைகள் நுழைந்து இருப்பதால் அங்கு சண்டை தீவிரமடையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மூன்றாம் உலகப்போர் :

இதனால் அங்கு சிக்கி உள்ள மக்கள் பெரும் பீதியுடன் உள்ளனர். இதற்கிடையே மரியுபோல் நகரில் இருந்து வெளியேறும் மக்களை ரஷிய படை தடுத்து வருகிறார்கள் என்றும் அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொண்டு செல்வதையும் தடுக்கிறார்கள் என்று உக்ரைன் குற்றம்சாட்டி உள்ளது. தலைநகர் கீவ்வுக்குள் நுழைய முயற்சித்தும் ரஷிய படைகளை உக்ரைன் ராணுவத்தினர் தடுத்து வருகிறார்கள். 

இதனால் கிவ்வின் புறநகர் பகுதிகளில் சண்டை நீடித்தபடி இருக்கிறது. அதே போல் கார்கிவ் நகரிலும் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்த நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 'ஆனால், இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், அது  மூன்றாம் உலகப் போராக மாறும். கடந்த 2 ஆண்டுகளாகவே நான் பேச்சுவார்த்தைக்கு தயராக இருக்கிறேன். ஆனால், பேச்சுவார்த்தையின்றி இந்தப் போரை நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியாது' என்றார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

New World Map: நாம் பார்த்த உலக மேப் தவறா? ஆப்பிரிக்காவை பெரிதாக காட்டும் புதிய வரைபடம்!
Samosa History: சமோசா இந்திய உணவு இல்லையாம்! இதன் ஆச்சரிய வரலாறு இதோ.!