உடல் முழுவதும் டாட்டூ போட்டுள்ளதால் தன்னை புறக்கணிப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஆம்பர் லூக் கவலை தெரிவித்துள்ளார்.
உடல் முழுவதும் டாட்டூ போட்டுள்ளதால் தன்னை புறக்கணிப்பதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஆம்பர் லூக் கவலை தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாடல் அழகி ஆம்பர் லூக். 27 வயதான இவர் தனது கண், காது உட்பட 98 சதவிகிதம் உடலை டாட்டூகளால் நிரப்பியுள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராகன் கேர்ள் என அழைக்கப்படும் இவர், டாட்டூகளுக்காக இதுவரை சுமார் 2,00,000 பவுண்ட்ஸ் செலவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. நமது நாட்டு மதிப்பின்படி, 1 கோடியே 91 லட்சம் ரூபாய்.
இதையும் படிங்க: காசா முனையில் நிலவும் பதற்றம்.. இஸ்ரேல் பயங்கர வான்வெளி தாக்குதல்.. பயங்கரவாத அமைப்பின் முக்கிய 2 தளபதி பலி
தன் விருப்பத்திற்கேற்ப உடல் முழுவதும் டாட்டூ போட்டுக்கொண்டாலும் தற்போது அதற்காக அவர் வருந்தி வருகிறார். அதற்கு காரணம் அவரிடம் மற்றவர் காட்டும் பாகுபாடு மற்றும் புறக்கணிப்பே என கூறுகிறார். இதுக்குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நான் மிகவும் அதிகமாக பச்சை குத்திக் கொண்டிருக்கிறேன், ஆனால் நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. ஒவ்வொருவருக்கும் தங்கள் கருத்துகளை கூற உரிமை உண்டு.
இதையும் படிங்க: கணவன் இல்லாத நேரத்தில் மனைவியை மிரட்டி உல்லாசம்.. கயவாளித்தனம் செய்த போலீசை கொத்துக்கறி போட்ட புருஷன்.
ஆனால் மக்கள் பொது வெளியில் கருணையற்ற கருத்துகளை வெளியிடும் போது அது வேதனையாக இருக்கிறது. குறிப்பாக டாட்டூ போட்டுக்கொண்டு தன் தோற்றத்தை அழித்துவிட்டாள் என்று அவர்கள் கூறும்போது வருத்தமளிக்கிறது. இந்த தோற்றத்தால் எனக்கு வேலை கிடைப்பதில் சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் இந்த டாட்டூக்களின் மீது சுகர் கோட் செய்யப் போவதில்லை. அது எனது வேலைவாய்ப்பு போன்ற விருப்பங்களை மட்டுப்படுத்தியிருந்தாலும் பரவாயில்லை என்று தெரிவித்துள்ளார்.