கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகிறது இந்த மருந்து...!! வூகான் பல்கலைகழக மறு ஆய்வில் தகவல்..!!

Published : Apr 02, 2020, 06:00 PM IST
கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயலாற்றுகிறது இந்த மருந்து...!!  வூகான் பல்கலைகழக மறு ஆய்வில் தகவல்..!!

சுருக்கம்

இது மற்றவர்களுக்கு அதாவது லேசான வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .

மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் லேசான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கிறது  என்றும் இந்த மருந்தை உட்கொண்டவர்கள் விரைவில் குணமடைந்து வருகின்றனர் என்றும் நடத்தப்பட்ட மறு ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த தகவலை சீன ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர் ,  உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது .  இதற்கென பிரத்யேக தடுப்பு ஊசியோ மருந்துகளோ  இல்லை அதை கண்டுபிடிக்கும்  ஆராய்ச்சிகள்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது .  இந்நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்  என்ற மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தலாம் என ஏற்கனவே அமெரிக்கா  பரிந்துரை செய்தது அதன் பிறகு சில நாட்கள் கழித்து  இம் மருந்தை உட்கொள்பவர்கள் பார்வை குறைபாடு ,  இதய பிரச்சனை ,  உள்ளிட்ட பல்வேறு பக்க விளைவுகளுக்கு ஆளாக நேரிடும் என மற்றொரு தரப்பினர் எச்சரித்தனர். 

இந்நிலையில் இந்த மருந்தை பயன்படுத்தலாமா கூடாதா என மருத்துவர்களிடையே  பெருத்த சந்தேகம் ஏற்பட்டது .  இதனால் இன்னும் சிலர் மாற்று மருந்துகளை சிகிச்சைக்காக பயன்படுத்த தொடங்கினார் இந்நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லபலன் கொடுப்பதாக மறு ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது .  ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை மறு ஆய்வுபுக்கு உட்படுத்தியபோது அது வைரசின் வீரியத்தை வெகுவாக கட்டுப்படுத்துவதாக தெரியவந்துள்ளது .  இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள பாட்டர் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர் டாக்டர் வில்லியம் ஷாஃப்னர்,  இந்த மருந்து குறித்து மறு ஆய்வில் வெளியாகியுள்ள தகவல் மருத்துவ உலகில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது  என தெரிவித்துள்ளார் .  சமீபத்திய ஆய்வு - வைரஸ் தோன்றிய நகரத்தின் வுஹான் பல்கலைக்கழகத்தின் ரென்மின் மருத்துவமனையில் நடத்தப்பட்டது, 

இந்த ஆய்வில்  சுமார் 45 வயதுடைய 62 நோயாளிகளிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டது அது வைரஸ் வெகுவாக கட்டுப்படுத்தியது தெரியவந்துள்ளது .  அதேபோல் ஏற்கனவே கல்லீரல் அல்லது சிறுநீரக பிரச்சனை மற்றும் இதய நாளம்,  பார்வை கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளால் உள்ளவர்கள் இந்த மருந்து எடுத்துக் கொள்ளக்கூடாது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் .  இது மற்றவர்களுக்கு அதாவது லேசான வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர் .  மருந்து சாப்பிட்ட ஒருநாளுக்குள்ளாகவே இருமல் தணிந்து நிமோனியா விலிருந்து விடுதலை கொடுப்பதாகவும்,  இன்னும் சிலருக்கு இது பலனளிக்கவில்லை என்றும் லேசான வைரஸ் தாக்கம் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த மருந்து பயன்படும் எனவும் ஷாப்னர் எச்சரித்துள்ளார். 

 

 

PREV
click me!

Recommended Stories

ஹமாஸ் நமக்கு பொது எதிரி.. உடனே இதைச் செய்யுங்க.. இந்தியாவுக்கு இஸ்ரேல் வார்னிங்!
என் புருஷன் என்னை ஏமாத்திட்டாரு.. பிரதமர் மோடியிடம் பாகிஸ்தான் பெண் உருக்கமான கோரிக்கை!