''கொரோனா''ங்கிற வார்த்தையை கூட சொல்லக்கூடாது... மீறினால் ஜெயில் தான்... சர்வாதிகாரியின் தடாலடி கட்டுப்பாடு...!

By Kanimozhi PannerselvamFirst Published Apr 2, 2020, 5:49 PM IST
Highlights

ஊடகங்கள், பத்திரிகைகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிற்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வுனான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தற்போது உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கொரோனா தாக்கத்தில் இருந்து சீனா மீண்டு விட்டதாகவும், இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், எவ்வித அறிகுறியும் இல்லாமல் சீனாவில் 1300 பேர் மீண்டும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாடுகளை ஆட்டி படைக்கும் கொரோனா, மத்திய பசுபிக் கடல் பகுதியில் உள்ள குட்டி, குட்டி தீவு நாடுகளை கொஞ்சம் கூட நொந்தரவு செய்யவில்லை. 

இதையும் படிங்க: 15 வயசிலேயே இப்படியா?... முன்னணி ஹீரோயின்களை கதறவிடும் அனிகா... வைரலாகும் போட்டோ....!

அப்படி மத்திய ஆசிய நாடுகளில் ஒன்று தான் துர்க்மேனிஸ்தான், அங்கு  இதுவரை ஒருவர் கூட கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை. இதனால் ஓவராக கெத்து காட்டி வரும் அந்நாட்டு அரசு, கொரோனா வைரஸ் என்ற வார்த்தையை கூட நாட்டு மக்கள் பயன்படுத்த கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதையும் படிங்க: இது டவலா?... டிரஸா?.... யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி உடையை பார்த்து நக்கலடிக்கும் நெட்டிசன்கள்...!

ஊடகங்கள், பத்திரிகைகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பிற்கும் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையில் முகக்கவசங்களை அணிந்து கொண்டு செல்லக்கூடாது என்றும், இந்த உத்தரவுகளை மீறினால் கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிபர் குர்பங்குலி பெர்டிமுகாம்தோவ் சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த முயல்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. 
 

click me!