அது நான்கு கட்டங்களை அடையவேண்டும் முதல் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து எலி அல்லது குரங்கு போன்ற விலங்கினங்களுக்கு பயன்படுத்தி அதன் மூலம் அது செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி மக்களின் பயன்பாட்டிற்கு வர குறைந்தது 15 மாதங்களுக்கு மேல் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது . நாளுக்கு நாள் மக்கள் உயிரிழந்து வரும் நிலையில் உலக சூகாதாரத்துறையில் இந்த தகவல் உலக நாடுகள் மத்தியில் மிகுந்த கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது . சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உள்ளது . எப்போதும் இல்லாத அளவிற்கு மனித சமூகம் இந்த கொள்ளை நோய்க்கு ஆளாகி மனித பேரிழப்பை சந்தித்து வருகிறது . இதுவரையில் 8 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்தை நெருங்கியுள்ளது .
இந்நிலையில் மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் தீவிரம் காட்டி வருகின்றனர் . அமெரிக்கா , சீனா , ஜப்பான் , இஸ்ரேல் போன்ற நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இரவு பகலாக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . இந்நிலையில் அமெரிக்கா மருந்து கண்டுபிடிப்பதற்கான முதற்கட்ட சோதனையை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது . சீனாவும் அதன் முதற்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில் வைரசை கட்டுபடுத்த மருந்து இல்லாததால் மரணங்கள் அதிகரித்து வருகிறது. விரைந்து மருந்து கண்டு பிடித்தால் மட்டுமே இதிலிருந்து மீள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எப்போது மருந்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் மருந்து கிடைக்க தற்போதைக்கு சாத்தியமில்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதறாகன காரணத்தையும் அவர்கள் கூறியுள்ளனர். அதாவது ஒரு புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்றால் ,
அது நான்கு கட்டங்களை அடையவேண்டும் முதல் கட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்து எலி அல்லது குரங்கு போன்ற விலங்கினங்களுக்கு பயன்படுத்தி அதன் மூலம் அது செயல்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பின்னர் அதை மனிதர்களுக்கு செலுத்தி அதன் செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும் . அதன் பின்னர் அது பாதுகாப்பானதுதானா அதனால் பக்க விளைவுகள் ஏதாவது ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதா, என்பது குறித்தெல்லாம் உறுதி செய்ய வேண்டும் . பின்னர் அதை உலகச் சுகாதார நிறுவனத்தின் மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு உகந்த மருந்துதான் என சான்றிதழ் பெற வேண்டும் . ஆகவே இந்நிலையில் அமெரிக்கா தயாரித்துள்ள மருந்து தற்போது மனித பரிசோதனையில் இருந்து வருகிறது . ஆகவே அது இன்னும் பல படிநிலைகளைக் அடைய வேண்டியுள்ளது, எனவே தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 15 மாத காலமாவது காத்திருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனத்தில் இத்தகவல் அன்றாடம் மக்களை பறிகொடுத்து வரும் நாடுகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.