அதையெல்லாம் படிக்கக் கூடாது! பிரபலமான ஓரினச்சேர்க்கை நாவலை விற்ற கடைக்கு ரூ.29 லட்சம் அபராதம்!

By SG Balan  |  First Published Jul 19, 2023, 4:50 PM IST

2021ஆம் ஆண்டு ஹங்கேரியில் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி அறிவதை தடைசெய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.


ஓரினச்சேர்க்கை தொடர்பான கிராஃபிக் நாவலை விற்ற புத்தக விற்பனையாளருக்கு ஹங்கேரி அரசு மிகப்பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது. ஹங்கேரியின் இரண்டாவது பெரிய புத்தக விற்பனை நிறுவனம் Lira Konyv. இந்நிறுவனத்தின் கடை ஒன்றில் 'Heartstopper' என்ற வயது வந்தோருக்கான நாவல் இளைஞர் இலக்கியப் பிரிவில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஹங்கேரி நாட்டு சட்டத்தின்படி வயது வந்தோருக்கான நாவலை 2021 பிளாஸ்டிக் உறைக்குள் வைக்கத் தவறியதற்காக அந்த நிறுவனத்திற்கு 27,500 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ. 29,26,146) அபராதம் விதிக்கப்பட்டது. ஹங்கேரியின் 2021ஆம் ஆண்டு குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது சிறார்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் புத்தகங்கள் ஆகியவற்றில் ஓரினச்சேர்க்கை தொடர்பான உள்ளடக்கம் இடம்பெறுவதைத் தடுக்கிறது.

Tap to resize

Latest Videos

பென்டகனை மிஞ்சிய குஜராத் கட்டிடம்! உலகின் மிகப்பெரிய அலுவலகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

பிரபலமான "ஹார்ட்ஸ்ஸ்டாப்பர்" கிராபிஃக்ஸ் தொடர்கதையை ஆங்கில எழுத்தாளர் ஆலிஸ் ஓஸ்மேன் எழுதியுள்ளார். இந்தக் கதை நெட்ஃபிக்ஸ் ஓடிடியில் நகைச்சுவையும் காதலும் கலந்த வெப்சீரீஸாகவும் எடுக்கப்பட்டுள்ளது. இதன் கதை உயர்நிலைப் பள்ளியில் இரண்டு இளைஞர்கள் தன்பால் ஈர்ப்பினால் காதல்வயப்படுவதைச் சித்தரிக்கிறது.

counting down the days until Heartstopper S2 with some new photos 🍂 pic.twitter.com/lo9wR03ZBc

— Netflix Nordic (@NetflixNordic)

"விசாரணையில், இந்தப் புத்தகம் ஓரினச்சேர்க்கையை சித்தரிப்பது கண்டறியப்பட்டது.. இருப்பினும் அவை குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் படிக்கும் புத்தகங்களுடன் வைக்கப்பட்டிருந்தன. மேலும் அவை பேக் செய்து மூடிய நிலையில் வைக்கப்படவில்லை" என்று அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளநு.

புத்தக விற்பனை நிறுவனத்தின் தரப்பிலும் இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருக்கிறது. சட்டம் மிகவும் தெளிவற்றதாகவும் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹங்கேரியில் பிரதமர் விக்டர் ஓர்பன் தலைமையிலான அரசு கிறிஸ்தவ-பழமைவாத போக்குடன் செயல்படுவதாக விமர்சிக்கப்படுகிறது. 2021ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான விமர்சனங்களை மீறி, 18 வயதிற்கு உட்பட்டவர்கள் ஓரினச்சேர்க்கை பற்றி அறிவதை தடைசெய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் மேல்முறையீடு: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்

click me!