ஒரு செவிலியர் உள்நோயாளிகளை பராரிக்கும் பகுதிகளிலிருந்து, மருந்தகத்திற்கு தேவையின்றி நடந்து செல்லும் நேரத்தையும் இந்த ரோபோக்கள் குறைத்துவிடுகிறது.
சிங்கப்பூர், இந்த குட்டி தீவு, அறிவியல் வளர்ச்சியின் முன்னோடி என்றே கூறலாம். நல்ல பல அறிவியல் மாற்றங்கள், சீர்குலைக்கப்படாத இயற்கை அழுகு என்று இரண்டையும் ஒருசேர வளர்ந்து வருகின்றது சிங்கப்பூர். இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் மருந்துகளை வழங்கக்கூடிய ஒரு புதிய ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிக அளவிலான நோயாளிகளை சிரமமின்றி கணவனித்துக்கொள்ள இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது சிங்கப்பூர். சாங்கி பொது மருத்துவமனையின் ரோபோ ஒன்று, ஒவ்வொரு நாளும் 16 முறை மருந்து விநியோகம் செய்யும் வேலைகளை செய்து வருகின்றது. இதனால் அங்குள்ள செவிலியர்களால் சுமார் 2 மணிநேரத்தை சேமிக்கமுடிகிறது.
undefined
மேலும் ஒரு செவிலியர் உள்நோயாளிகளை பராரிக்கும் பகுதிகளிலிருந்து, மருந்தகத்திற்கு தேவையின்றி நடந்து செல்லும் நேரத்தையும் இந்த ரோபோக்கள் குறைத்துவிடுகிறது. உண்மையில் செவியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்று அவசர சிகிச்சைப் பிரிவில் உதவி செவிலியர் மருத்துவரான திருமதி அடோரா சியோங் தெரிவித்துள்ளார்.
உணவில் கிடந்த காண்டம்? அரண்டு போன மாணவர்கள் - ஆனால் பள்ளி நிர்வாகம் அளித்த பதில் என்ன தெரியுமா?
இந்த ரோபோக்கள் என்னென்ன செய்யும்.
உரிய மருந்துகளை, நோயாளிகளிடம் நேரம் தவர்மால் கொடுப்பது
மருந்தகம் சென்று மருந்துகளை விரைவாக வாங்கி வருவது
நோயாளிகளின் தேவை அறிந்து மருந்துகொடுப்பது என்று பல விஷயங்களில் பயன்படும்.
இதே போல மற்றொரு ரோபோ, அவசர சிகிச்சைப் பிரிவின் வெவ்வேறு பகுதிகளுக்கு மக்களை வழிநடத்த உதவுகிறது. செவிலியர்கள், நோயாளிகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நேரில் அழைத்துச் செல்லும் பணியில் இருந்தும் இந்த ரோபோக்கள் அவர்களுக்கு ஓய்வு அளிக்கிறது.
கடந்த 2022ம் ஆண்டு முதல பல வகை மருத்துவ ரோபோக்களை சிங்கப்பூர் தொடர்ச்சியாக பரிசோதனை செய்து வருகின்றது. ஏற்கனவே சிங்கப்பூரில் மால்களில் உணவு டெலிவரி மற்றும் தெருக்களில் ரோந்து பணியில் ரோபோக்கள் பணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Apple iPhone 12 : விலை இவ்வளவு தானா.! கம்மி விலைக்கு விற்பனையாகும் ஆப்பிள் ஐபோன் 12 - முழு விபரம்