மாணவர்கள் சாப்பிட உணவில் எதோ விசித்திரமான பிளாஸ்டிக் பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் பிரபலமான நகரங்களில் ஒன்று தான் குவாங்சோ, (Guangzhou) இங்கு உள்ள ஒரு தொழிற்கல்வி பள்ளியில் உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளி சிற்றுண்டிச்சாலையில் இருந்து உணவு பெற்று சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, நடந்த ஒரு விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாணவர்கள் சாப்பிட உணவில் எதோ விசித்திரமான பிளாஸ்டிக் பொருள் ஒன்று இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். அது வட்ட வடிவமாகவும், சற்று ட்ரான்ஸ்பரென்ட் வண்ணத்திலும் இருந்துள்ளது. இறுதியில் அந்த பொருள் ஒரு ஆணுறை என்று தெரிய வந்ததும் அந்த மாணவர்கள் அனைவரும் அதிர்ந்துபோயுள்ளனர்.
undefined
எல்லாரும் அவங்கள உத்து பாருங்க.. புகைபிடிப்பவர்களை கட்டுப்படுத்த புதிய வழி சொன்ன சுகாதார செயலாளர்!
உடனடியாக அங்கிருந்த மாணவர்களில் ஒருவர் மீடியாவிற்கு இந்த விஷயம் குறித்து தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் அந்த பள்ளி நிர்வாகம், சமையலறை ஊழியர்களை கண்டித்ததாகவும், அவர்களுக்கு அபராதம் விதித்தாகவும் கூறியுள்ளது. மேலும் உள்ளுர் சுகாதார நிர்வாகம் இதில் தலையிட்டு அந்த பள்ளி கேன்டீனில் உள்ள அனைத்து இடங்களில் சுகாதார பரிசோதனை மேற்கொண்டுள்ளது.
ஆனால் அதில் ஒன்றும் சிக்காத நிலையில், பள்ளி நிர்வாகம் அந்த மாணவர் சாப்பிட்டது வாத்து கறி என்றும். அதில் இருந்த அந்த மரம் பொருள் வாத்தின் கண்விழியில் உள்ள சவ்வு என்று கூறியுள்ளது. ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள சுகாதார நிர்வாகிகள் அந்த பள்ளியில் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அது உண்மையில் வாத்தின் கண்விழியில் உள்ள சவ்வு தானா?, அல்லது மாணவர்கள் பயந்தது போல அது ஆணுறையா? என்பது குறித்து இன்னும் கண்டறியப்படவில்லை. ஏற்கனவே சீனாவில் ஒரு பள்ளியில் வாத்து கறியில், எலியின் தலை இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதையும் வாத்தின் கழுத்து என்று சொல்லியது அந்த பள்ளி நிர்வாகம், இறுதி விசாரணையில் அது எலிதான் என்று கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆப்கனில் பெண்கள், சிறுமிகள் மீதான கட்டுப்பாடுகள் அதிகரிப்பு: ஐ.நா., அறிக்கை!