
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரியை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதைதொடர்ந்து தேர்தல் குறித்து பேசிய ஹிலாரி
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்பிற்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தது வேதனை அளிக்கிறது என்றும், தோல்வியால் ஏற்பட்ட வலி மறைவதற்கு நீண்ட காலம் ஆகும் என தெரிவித்தார் அவர், தேர்தலில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.
மேலும், டொனால்டு டிரம்ப் அதிபர் என்பதை திறந்த மனதுடன் ஏற்றக் கொள்ள வேண்டும் என அவரது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஹிலாரி, நாட்டிற்காக டிரம்புடன் இணைந்து பணியாற்ற தயார் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே ட்ரம்ப்பை அதிபராக ஏற்று கொள்ள முடியாது என அவரது எதிர்பாளர்கள் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.