Vladimir Putin: ரஷ்ய அதிபர் புதினுக்கு என்ன ஆச்சு? நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுவதாகத் தகவல்

By SG Balan  |  First Published Feb 21, 2023, 4:16 PM IST

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் புற்றுநோய், பார்க்கின்சன் உள்ளிட்ட நோய்களுக்காக சிகிச்சை பெறுவதாகத் தகவல்கள் கூறுகின்றன.


ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உடல்நிலை குறித்த புதிய ஊகங்கள் வலுப்பெற்று வருகின்றன. அவர் பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடனான சந்திப்பின் போது தொடர்ந்து தனது கால்களை வித்தியாசமாக நகர்த்துவதைக் காண முடிந்தது.

இதனால் சமூக ஊடகங்களில் சிலர் புதினின் அசைவுகளை கேலி செய்துள்ளனர். இன்னும் சிலர் அவர் பார்கின்சன் நோய் அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர்.

Tap to resize

Latest Videos

Deep Blue: 7 ஆண்டுகளுக்குப் பின் வைரலாகும் உலகின் மிகப்பெரிய வெள்ளை சுறா!

ஊகங்கள் இருந்தபோதிலும், கிரெம்ளின் புதினின் உடல்நிலை குறித்த கவலைகளை நிராகரித்துள்ளது மற்றும் அவர் சிறந்த உடல் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ளது.

Sex with a Car: காருடன் உறவு கொள்ளும் இளைஞர்! அதிர்ச்சியில் தந்தை!

இதற்கிடையில், 70 வயதான ரஷ்ய ஜனாதிபதி மார்ச் மாத தொடக்கத்தில் புதிய சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. ரஷ்ய டெலிகிராம் சேனல் ஜெனரல் SVR முன்னர் கூறிய செய்தியை மேற்கோள் காட்டி, புதினுக்கு புற்றுநோய் உள்ளிட்ட கடுமையான மருத்துவப் பிரச்சனைகள் இருப்பதாக 'தி மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது.

"வார இறுதியில், புதின் மற்றொரு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். சமீபத்திய சிகிச்சையானது எதிர்பார்த்த முடிவுகளைத் தரவில்லை. மேலும் இந்த முடிவுகளின் அடிப்படையில், புதிய சிகிச்சை மார்ச் 5ஆம் தேதி நடக்கலாம். வரவிருக்கும் நாட்களில் அதிபர் புதினின் திட்டங்கள் மற்றும் முடிவுகளில் இதனால் பாதிப்பு ஏற்படலாம்" என்றும் மிரர் அறிக்கை கூறியது.

பார்கின்சன், புற்றுநோய் ஆகியவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கணிப்புகள் நிலவுகின்றன. அதனால்தான் எப்போதும் டாக்டர்கள் குழுவுடன் பயணிக்கிறார் என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. புதின் மன அழுத்தத்துடன் போராடி வருவதாகவும், 'பபிள் டியூப்' பயன்படுத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Turkey earthquake: உத்தராகண்டில் துருக்கியைப் போன்ற நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு; நிலநடுக்க வல்லுநர் எச்சரிக்கை

கொரோனா தொற்று காலத்தில் புதின் தன்னை முழுமையாகத் தனிமைப்படுத்திக்கொண்டார். உலக நாடுகள் பங்கேற்ற உச்சிமாநாடுகளில் மற்ற உலகத் தலைவர்களுக்கு அருகில் செல்வதைத் தவிர்த்தார். இதனால் அப்போது அவருக்கு இருக்கும் உடல்நிலை பிரச்சினைகள் வெளியே தெரியவில்லை.

கோவிடு-19 தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ள இரண்டு ஆண்டுகள் தனிமைப்படுத்திக்கொண்டு இருந்ததால் விளாடிமிர் புதினின் மன ஆரோக்கியம் பற்றி என சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்த பிறகு இந்த சந்தேகத்துக்கு வலு ஏறியது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் தாக்குதல் பகுத்தறிவற்ற செயல் எனப் பலர் கருதினர்.

கடந்த 2022 ஜூலை மாதத்தில், அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ், புதின் உடல்நிலை சரியில்லாதவராக இருப்பதாகக் கூறுவதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறினார். புதின் உடல்நிலை குறித்து உறுதிப்படுத்தப்படாத ஊடகத் தகவல்கள் அதிகரித்துவரும் நிலையில் பர்ன்ஸ் வெளியிட்ட அறிக்கை நினைவூட்டத்தக்கது.

NatGeo Photo Of the Year: நேஷனல் ஜியோகிராபிக் பரிசு பெற்ற வெண்தலை கழுகு புகைப்படங்கள்

click me!