ஆர்ட் பீட்டை எகிறவைக்கும் இந்தியாவின் பயங்கர முடிவு...!

By Asianet Tamil  |  First Published Aug 16, 2019, 9:40 AM IST

இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவுடன் உறவு பாராட்ட விரும்புகிறோம், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்குமான உறவு வெரும் வார்த்தையளவிலானது அல்ல, உணர்வு பூர்வ நண்பர்களுக்கிடையிலான உறவு 


இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்ததை  தொடர்ந்து இஸ்ரேல், கனடா உள்ளிட்ட நாடுகளும் தங்களது ஆதரவை பிரதமர் மோடிக்கை அளித்துள்ளனர், இது சினா மற்றும் பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய சுதந்திர தினதையொட்டி அனுப்பியுள்ள வாழ்த்து கடிதத்தின் மூலம் அந்நாடுகள் இந்தியாவிற்கான தங்களின் ஆதரவை வெளிபடுத்தியுள்ளன.காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுடன் இணைந்து சினாவும் பேசிவரும் நிலையில், இந்தியாவிற்கு எதிராக பல்வேறு சதி வேலைகளில் இவ்விரு நாடுகளும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய சுத ந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது, அதற்கு முன்வந்து வழ்த்து கடிதம் அனுப்பிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்தியாவுக்கு தங்களுடைய ஆதரவு என்றும் உள்ளது என தெரவித்திருந்தார்.

Latest Videos

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்ஜமின் நத்யன்யாஹூ இந்தியாவிற்கு வீடியோ வடிவிலான வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்,அதில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவுடன் உறவு பாராட்ட விரும்புகிறோம், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்குமான உறவு வெரும் வார்த்தையளவிலானது அல்ல, உணர்வு பூர்வ நண்பர்களுக்கிடையிலான உறவு என்றும் கூறியுள்ளார், அதற்கு பதில் அளித்துள்ள மோடி இஸ்ரேலின் உறவை வரவேற்பதாக தெரிவித்துள்ளாதுடன் பிரதமர் பென்ஜமினை பிபி என்றும் செல்லமாக அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் துருடுவா பிரதமர் மோடிக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார் அதில்  இந்தியர்களுக்கும் கனடர்களுக்குமான உறவு நீண்ட நெடியது என்றும், உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக்கொள்கிறோம் என்றும்,அனைத்திலும்  இரண்டு நாட்டு மக்களும் இணைந்து செயல்பட வேண்டும் என்று வாழ்த்து கூறி இந்தியாவிற்கான தங்கள் நாட்டின் ஆதரவை அவர் வெளிபடுத்தியுள்ளார்.

மாலத்தீவு, நேபாளம், உள்ளிட்ட நாடுகளும் பிரமருக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இந்தியாவுடன் கரம்கோர்த்துள்ளனர்.இந்தியாவிற்கு சர்வதேச நாடுகள்மத்தியில் பெருகிவரும் ஆதரவு ,சினா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை எரிச்சலடையவைத்துள்ளது.

click me!