பாகிஸ்தானுக்கு சினா ன்னா- இந்தியாவுக்கு நாங்க இருக்கோம்...!

By Asianet Tamil  |  First Published Aug 15, 2019, 7:08 PM IST

இந்தியாவின் ஒவ்வொரு முடிவிலும் ரஷ்யா துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்,  என ரஷ்யஅதிபர்  புதின் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ரஷ்ய அதிபர் புதின் எழுதியுள்ள இக்கடிதம் சர்வதேச அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்த்ததாக கருதப்படுகிறது என்பதுடன், இந்தியாவிடம் வாலாட்டும் சினா, பாகிஸ்தானுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
 


காஷ்மீர் விவகாரத்தில் சீனாவும்,பாகிஸ்தானும் இணைந்து இந்தியாவிடம் வாலாட்டிவரும் நிலையில் இதோ இந்தியவானி நண்பன் நான் இருக்கிறேன் என்று ரஷ்யா  தன் பழைய பாசத்தை இந்தியாவின் மீது காட்டியுள்ளது, அதற்கு ஆதாரமாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் இந்தியாவிற்கு வாழ்த்து செய்தி அனுப்பி அதன் மூலம் ஆதரவை தெரிவித்துள்ளார். 

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ,பாகிஸ்தான், சினா ஆகிய இருநாடுகளும் இணைந்து  இந்தியாவின் நடவடிக்கைக்கு கண்டம் தெரிவித்துள்ளன, இந்நிலையில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக சீனாவின் அதரவுடன் ஐநா மன்றத்தில் புகார் கொடுக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது, இந்தியாவை சினா நேரடியாக எதிர்க்காவிட்டாலும் பாகிஸ்தானுக்கே தன் மறைமுகமாக ஆதரவை அளித்து வருகிறது.

Latest Videos

 

இந்த நிலையில் இந்தியாவின் 73 வது சுதந்திர தினவிழாவை இந்திய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்திய பிரதமர் மற்றும் இந்திய குடியரசுத்தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் , அந்த கடிதத்தில். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கும், இந்திய நாட்டு மக்களுக்கும் வணக்கம். இந்தியாவின் 73 வது சுதந்திர தினநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உலக அரங்கில் இந்தியா பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், கலாச்சாரம் என எல்லா துறைகளிலும் பீடுநடை போடுகிறது என்பதை உலகம் அறியும்.

 இந்தியவிற்கும் ரஷ்யாவிற்குமிடையிலான  உறவு பலமானது,  பல்வேறு துறைகளில் இணைந்து  வெற்றி கண்ட  கூட்டணி இந்திய- ரஷ்யா கூட்டணி, அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்குமான உறவு ஆத்மார்த்தமானது. தேசிய அளவிலும் சர்வதேசிய அளவிலும் இந்தியாவுடன் அனைத்து நிலைகளிலும் இணைந்து பயணிக்க ரஷ்யா தயாராக இருக்கிறது. சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில் இந்தியாவுடன் ஒரு மித்த நிலையில் செயல்படவும், ஆசியாவின் ஸ்திரத்தனைமையை நிலைநாட்ட இந்தியாவின் ஒவ்வொரு முடிவிலும் ரஷ்யா துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்,

 

 என ரஷ்யஅதிபர்  புதின் தன் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு ரஷ்ய அதிபர் புதின் எழுதியுள்ள இக்கடிதம் சர்வதேச அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்த்ததாக கருதப்படுகிறது என்பதுடன், இந்தியாவிடம் வாலாட்டும் சினா, பாகிஸ்தானுக்கு இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
 

click me!