பாலஸ்தீனப் பகுதி மீது இஸ்ரேல் குண்டுவீசத் தொடங்கியதில் இருந்து, காசா பகுதியில் அதன் படையினரால் பிடிக்கப்பட்ட "கிட்டத்தட்ட 50" இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவு இன்று வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த திடுக்கிடும் செய்தியை தனது தனது டெலிகிராம் சேனலில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த விஷயத்தை உடனடியாக சரிபார்க்க முடியவில்லை என்று இங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் கொடூரமான தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸா மீது வான் மற்றும் பீரங்கி குண்டுத் தாக்குதலை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் மற்றும் காசாவை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே தற்போது கடுமையான போர் நடந்து வருகிறது. நேற்று இரவு காசா மீது கடுமையான விமான வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இந்த தாக்குதலில் இஸ்ரேலின் காலாட்படையும், கவசப் படையும் ஈடுபட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
குறிப்பாக ஹமாஸ் தீவிரவாதிகளை குறிவைத்து இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி இருந்தது. முக்கிய தாக்குதலை துவக்குவதற்கு முன்பு, இந்த தாக்குதலை நடத்தி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கடந்த இரண்டு வாரங்களில் காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலை விட இந்த தாக்குதல் கடுமையாக இருந்ததாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதால் காசா பகுதியில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனம் பகுதியிலும் உயிரிழந்தவர்களை ஒட்டு மொத்தமாக புதைக்கும் நடவடிக்கைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பாலஸ்தீன அகதிகளுக்காக பேசிய ஐக்கிய நாடுகள் சபை நேற்று இஸ்ரேலை எச்சரித்தது குறிப்பிடத்தக்கது. எரிபொருளை உடனடியாக வழங்காவிட்டால், காசா பகுதி முழுவதும் நிவாரணப் பணிகள் தடைபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசா சேவைகள் மீண்டும் தொடக்கம்: இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு!