நாட்டில் சில விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது
நாட்டில் சில விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை நல்ல அறிகுறி என்றும் கனடா கூறியுள்ளது.
நாடு முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விண்ணப்பிக்கும் கனேடியர்களுக்கான சில வகையான விசா விண்ணப்ப சேவைகள் மீண்டும் தொடங்கப்படும், அதனை இந்திய அதிகாரிகள் செயல்படுத்துவார்கள் என கனடாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்கு சாத்தியமான தொடர்பு இருப்பதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்தன. இதையடுத்து, கனடா மற்றும் உலகெங்கிலும் உள்ள கனேடிய குடிமக்களுக்கான விசா சேவைகளை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது.
மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவு!
அதன்பிறகு, ஒரு மாதத்திற்கு பின்னர் சில விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை இந்தியா வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கனடா குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில், ‘ஒரு கவலையான நேரத்துக்கு இடையே இந்தியாவின் நடவடிக்கை நல்ல அறிகுறி.” என்றார். இந்த தற்காலிக நிறுத்த கூட, முதலில் நடந்திருக்கக்கூடாது என்பதே எங்கள் உணர்வு எனவும் அவர் கூறியுள்ளார். “உண்மையில் இந்தியாவுடனான தூதரக நிலைமை தொடர்பான விவகாரம் பல சமூகங்களில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது” என்று மார்க் மில்லர் கூறியுள்ளார்.
அவசரகால தயார்நிலை அமைச்சரும், சீக்கிய சமூகத்தை சேர்ந்தவருமான ஹர்ஜித் சஜ்ஜன் கூறுகையில், விசா செயலாக்கத்தை மீண்டும் தொடங்குவது நல்ல செய்தி. ஆனால் இதன் மூலம் இந்தியா என்ன செய்தியை அனுப்ப முயற்சிக்கிறது என்று ஊகிக்க முடியாது என்றார்.