10 மணி நேரம் Plank நிலையில் இருந்து கின்னஸ் சாதனை படைத்த நபர்.. வைரல் வீடியோ

By Ramya s  |  First Published May 25, 2023, 5:29 PM IST

நீண்ட நேரம் பிளாங் நிலையில் இருந்ததற்காக ஜோசப் சலேக் என்ற நபர் புதிய சாதனையை படைத்தார்


செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஜோசப் சலேக் என்ற நபர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். விடா முயற்சியுடனும் மன உறுதியுடனும், ஜோசப் கற்பனை செய்ய முடியாததை அடைந்தார். ஆம். அவர் நீண்ட நேரம் பிளாங் நிலையில் இருந்ததற்காக புதிய சாதனையை படைத்தார். 9 மணி நேரம், 38 நிமிடங்கள் மற்றும் 47 வினாடிகள் தனது பிளாங்க் நிலையில் இருந்து அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 9 மணி நேரம், 30 நிமிடங்கள் மற்றும் 1 வினாடி பிளாங் நிலையில் இருந்தஆஸ்திரேலியாவின் டேனியல் ஸ்காலியின் முந்தைய சாதனையை ஜோசப் முறியடித்துள்ளார்.

இதையும் படிங்க : உலகின் துன்பமான நாடுகள் பட்டியல் : முதலிடத்தில் ஜிம்பாப்வே.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது?

Tap to resize

Latest Videos

சவாலுக்குப் பிறகு ஜோசப் சலேக் தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். உண்மையில் கடினமான தருணங்கள் இருந்தன என்று கூறிய அவர்,  ஏழாவது மற்றும் எட்டாவது மணிநேரத்திற்கு இடையில் மிக முக்கியமான கட்டம் ஏற்பட்டது என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் "நான் மிகவும் மயக்கம் அடைந்தேன், கடுமையான வலியில் இருந்தேன், ஆனால் எனக்கும் நம்பிக்கை இருந்தது, மக்கள் என்னை நம்பினர், மேலும் இந்த சக்திவாய்ந்த உணர்வுகள் ஒன்றிணைந்து பணியை வெற்றிகரமாக செய்து முடிக்க எனக்கு உதவியது" என்று தெரிவித்தார்.

தனது கடந்த காலத்தை நினைவுகூர்ந்த ஜோஸ்கா, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, “நான் 15 கிலோ எடை அதிகமாக இருந்தேன், நான் மது மற்றும் சிகரெட்டுகளை விரும்பினேன். ஆனால் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கையை மாற்றும் தருணம் என்னை இந்த மாற்றத்திற்கு கொண்டு வந்தது.

உங்கள் வயது என்னவாக இருந்தாலும், நேர்மறையான மாற்றங்களைச் செய்து, "மகிழ்ச்சியான, மிக முக்கியமான மற்றும் ஆரோக்கியமான" வாழ்க்கையைத் தழுவுவது எப்போதும் சாத்தியமாகும்.” என்று தெரிவித்தார்.

ஜோசப் சலேக்கின் சாதனை முயற்சியை உன்னிப்பாகக் கவனித்து, கின்னஸ் உலக சாதனைத் தீர்ப்பாளர் ஜாக் ப்ரோக்பேங்க் ஒவ்வொரு நொடியையும் துல்லியமாகக் கவனித்தார். ஆரம்பத்தில், ஜோசப் முதல் சில மணிநேரங்களில் இயல்பாக தோன்றினார். இருப்பினும், நேரம் செல்ல செல்ல, ஏழு மணி நேரத்திற்குள் வலி தெளிவாகத் தெரிந்தது. சவால் இருந்தபோதிலும், தனது உள் வலிமையை சேகரித்து இறுதியில் ஏற்கனவே உள்ள சாதனையை முறியடித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஆரவார கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். உணர்ச்சிகரமான தருணத்தில் ஜோசப். கின்னஸ் சாதனைச் சான்றிதழை உயர்த்தி, வெற்றியைக் கொண்டாடினார்.

இதையும் படிங்க : ஒரே ஒரு ஒயின் பாட்டிலை ஏலத்தில் விற்று கோடீஸ்வரரான மார்க் பால்சன்!

click me!