செய்தித்தாள் எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டிய SHP Media trust? அரசு நிதி ஒதுக்கப்படும் என எச்சரிக்கை!

By Dinesh TG  |  First Published Jul 7, 2023, 9:10 AM IST

SPH Media Trust நிறுவனத்தில் எதிர்காலத்தில் கடுமையான தவறுகள் கண்டறியப்பட்டால் அந்நிறுவனத்திற்கு அரசு வழங்கும் நிதியுதவி நிறுத்தப்படும் என சிங்கப்பூர் நாட்டு தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்துள்ளார்.
 


நாட்டு நடப்புகளை அறிய சிங்கப்பூர் மக்கள் தொடர்ந்து பாரம்பரிய ஊடகங்களையும், பத்திரிக்கைகளையும் சாந்திருக்கின்றனர். இந்நிலையில், SPH Media Trust செய்தித்தாள் விநியோக எண்ணிக்கையை மிகைப்படுத்திக் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பாக, தணிக்கை குழுவினர் அளித்த அறிக்கையின் படி SPH Media Trust நிறுவனத்தின் குளறுபடிகள் குறித்த தவறுகள் தெரியவந்துள்ளதால் காவல்துறையிடம் புகார் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூர் நாடாளுமன்ற அவையில் SPH Media Trust நிறுவன விவகாரம் குறித்த சிலர் கேட்ட கேள்விகளுக்கு தகவல்தொடர்புத்துறை அமைச்சர் ஜோசஃபின் தியோ பதிலளித்துப் பேசினார். அப்போது, SPH Media Trust நிறுவனம் மீது பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கை சீர்குலையவில்லை என்று தெரிவித்தார். மேலும், இடர்குழுவின் அறிக்கையின் படி, காவல்துறையிடம் புகாரளிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் அரசின் நிதியுதவி முற்றிலும் நிறுத்தப்படும் என்றும் அவர் விளக்கினார்.

சிங்கப்பூரில் மகளின் மரணத்திற்கு காரணமான தாய்.. 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க அரசு தரப்பு கோரிக்கை..

மேலும், இனிமேல் SPH Media Trust நிறுவனம் அதன் நிதி நிலவரம் முறையான தகவல்களை அவ்வப்போது வெளியிட நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மேம்பாட்டு பணிகள் குறித்து 6 மாதங்களுக்கு ஒருமுறை துறைசார்ந்த அமைச்சகத்திற்கு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

எனவே, SPH Media Trust நிறுவனத்துக்கு ஏற்கனவே அறிவித்தபடி தொடர்ந்து நிதியுதவி வழங்கும் என்றும் அமைச்சர் ஜோச ஃபின் தியோ தெரிவித்தார். காவல்துறை விசாரணை தொடரும் நிலையிலும், SPH Media Trust நிறுவனம் அதன் பணிகளை மேற்கொள்வதை அரசு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கண்காணிக்கும் என்றும் அமைச்சர் ஜோசஃபின் தியோ தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

26 முறை ஆத்திரம் தீர குத்திய பணிப் பெண்! 70 வயது மூதாட்டி பலி! - சிறாரா? இல்லையா? குழம்பிய நீதிமன்றம்!

click me!