கூகுள் நிறுவனம் செய்த பெரிய தவறு.. பாதிக்கப்பட்ட தம்பதிக்கு ரூ.26 கோடி இழப்பீடு..நடந்தது என்ன ? 

By Kalai Selvi  |  First Published Oct 29, 2024, 3:16 PM IST

கூகுள் நிறுவனம் 15 ஆண்டுகள் சட்ட போராட்டத்திற்கு பின் இங்கிலாந்து தம்பதிக்கு 26,172 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க தீர்ப்பாகியுள்ளது.  


இங்கிலாந்து தம்பதியினர் கூகுளுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தனர். பல போராட்டங்களுக்கு பின் கிட்டதட்ட 15 ஆண்டு கால சட்டப் போராட்டத்தில் இப்போது அத்தம்பதி வெற்றி கண்டுள்ளனர். உலகளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் செய்த ஒரு காரியத்திற்கு தற்போது 26,172 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த தம்பதி  சிவான்- ஆடம் ராஃப். இவர்கள் தாங்கள் பார்த்து வந்த வேலையை விட்டு விலகி, 'ஃபவுண்டெம்' (Foundem) என்ற விலை ஒப்பீட்டு  இணையதளத்தை 2006இல் சொந்தமாக தொடங்கினர். பின்னர் கூகுளில் "விலை ஒப்பீடு" மற்றும் "ஷாப்பிங்" போன்ற முக்கிய சொற்களுக்கான தேடல்களை மேற்கொண்டுள்ளனர். இதில் அவர்களுக்கு அதிர்ச்சி தான் பதிலாக வந்துள்ளது. ஏனென்றால் கூகுளில் ஃபவுண்டெம் வலைத்தளம் மோசமான வீழ்ச்சி அடைந்துள்ளது. கூகிளின் தானியங்கி ஸ்பேம் வடிகட்டி (spam filter) விதித்த அபராதத்தால் இவர்களுடைய வலைதள பக்கம் எதிர்பாராத வீழ்ச்சியை அடைந்துள்ளது. 

Latest Videos

undefined

இதையும் படிங்க:  கூகுள் கொடுக்கும் 6 ஸ்காலஷிப் திட்டங்கள்! இந்திய மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!

அந்த தம்பதி எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாகவே அவர்களின் தளத்தை கூகுள் மதிப்பிட்டது. தொடக்கத்தில் இந்த பிரச்சனையை அவர்கள் கூகுள் மீது திருப்பவில்லை. தங்கள் வலைதளத்தில் ஏதேனும் பிழை இருக்கலாம் என நினைத்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கூட கூகுள் அபராதத்தை நீக்கவில்லை. இதனால் ஃபவுண்டெமின் வாடிக்கையாளர்கள் வெகுவாக குறைந்தனர்.  ஆனால் கூகுள் அல்லாத மற்ற தேடுபொறிகள் (search engines) ஃபவுண்டெமை சாதாரணமாக வரிசைப்படுத்துகின்றன. கூகுளின் தேடல் முடிவுகளில் மட்டும் பயனர்கள் ஃபவுண்டெம் தளத்தை அணுக முடியாமல் போனது. இதனால் ஃபவுண்டெம் நிறுவனர்கள் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:  கூகுளில் ஈசியா ரூ.1 லட்சம் சம்பாதிக்கலாம்; எப்படின்னு பார்க்கலாம் வாங்க!!

இதைத் தொடர்ந்து அத்தம்பதி 2010ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தை அணுகியுள்ளனர். பல ஆண்டுகள் விசாரணை நடந்தது. இந்த விசாரணையில், கூகுள் நிறுவனம், ஃபவுண்டெம் போன்ற போட்டியாளர்களை விட தன் சொந்த ஷாப்பிங் சேவையை மட்டுமே விளம்பரப்படுத்தியது தெரியவந்தது. 2017 ஆம் ஆண்டில் ஆணையம், கூகுள் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தியதை சுட்டிக்காட்டி 2.4 பில்லியன் பவுண்டுகள் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. 

இதை எதிர்த்து கூகிள் மேல்முறையீடு செய்தது. கடந்த ஏழு ஆண்டுகளாக நடந்த சட்டப் போராட்டத்தின் முடிவில் 2024இல், கூகுளின் மேல்முறையீடுகளை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது. மேலும், அபராதத்தையும் உறுதி செய்தது. இதன்படி கூகுள் நிறுவனம் இங்கிலாந்து தம்பதிக்கு 26,172 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்க வேண்டும்.

click me!