பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவில் இந்தியர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரிக்ஸ் மாநாட்டில் இருநாட்டு பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று பிரதமர் மோடி ரஷ்யாவில் இருக்கும் கன்சன் சென்றடைந்தார். அங்கு அவருக்கு ரஷ்யா வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு ரஷ்யாவில் நடக்கிறது. இதையொட்டி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று காலை ரஷ்யா புறப்பட்டுச் சென்றார். தற்போது கன்சன் சென்றடைந்த அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது. ரஷ்யாவுக்கான இந்திய தூதர் வினய் குமாரும் இதை உறுதிபடுத்தியுள்ளார்.
undefined
பிரிக்ஸ் என்றால் என்ன?
பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. இந்த அமைப்பில் மேற்கத்திய நாடுகள் ஒன்று கூட இல்லை.
2001ஆம் ஆண்டில் இந்த அமைப்பை பொருளாதார வல்லுநர் ஜிம் ஓ'நெயில் உருவாக்கினார். B - Brazil, R-Russia, I-India, C- China, S-South Africa முதல் எழுத்தை தொகுத்து BRICS என்று வைக்கப்பட்டது. முன்பு எஸ் கிடையாது பின்னர் சேர்க்கப்பட்டது.
பிரிக்ஸ் நாடுகளுக்குள் பொருளாதார ஒத்துழைப்பு மேற்கொள்வது, மேற்கத்திய நாடுகளின் சவாலை எதிர்கொள்வது என்ற நோக்கத்தில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டில் தான் இந்த அமைப்பில் தென் ஆப்ரிக்கா இணைந்தது. இதற்குப் பின்னர் பிரிக்ஸ் அமைப்பில் சவூதி அரேபியா, ஈரான், எதியோபியா, ஐக்கிய அரபு எமிரகம் ஆகியவை இணைந்து கொண்டன. 2050 ஆம் ஆண்டில் உலக பொருளாதாரா வளர்ச்சியை எட்டுவது, வெளிநாட்டினருக்கு முதலீடு செய்வதற்கு வாய்ப்பு வழங்குவது ஆகியவை பிரிக்ஸ் அமைப்பின் நோக்கமாகும்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் 2030ஆம் ஆண்டில் 100 பில்லியன் டாலர் வர்த்தகத்தை அடைவது என்ற இலக்கை நிர்ணயித்து செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்கோவில் பிரதமர் மோடிக்கு 'ஹரே கிருஷ்ணா... ஹரே ராம்' என்ற கோஷத்துடன் பஜனை பாடி பிரமாண்ட வரவேற்பு அளித்த பொதுமக்கள். pic.twitter.com/rxFPGzbNJ6
— Asianetnews Tamil (@AsianetNewsTM)பிரிக்ஸ் அமைப்பில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தை கொண்ட பத்து நாடுகள் உள்ளன. உலக மக்கள் தொகையில் 45.29% மக்கள் தொகையை கொண்டுள்ளது. உலக மொத்த உள்நாட்டு வளர்ச்சியில், அதாவது ஜிடிபி-யில் 27% பிரிக்ஸ் அமைப்பில் இருக்கும் நாடுகளிடம் இருக்கிறது.
சமீபத்தில் இந்திய திரைப்படங்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டி பேசி இருந்தார். அப்போது, நான் எங்களுடைய நண்பர் பிரதமர் மோடி கசன் வரும்போது பேசுவதற்கு தயாராக இருக்கிறேன் என்று புடின் தெரிவித்து இருந்தார்.
இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் கலந்து கொள்வதற்காக ரஷ்யா வந்துள்ளார். பிரதர் மோடியும், ஜி ஜின்பிங்கும் சந்திப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று மாலை பிரிக்ஸ் உச்சி மாநாடு துவங்குகிறது. இதையொட்டி விருந்தினர்களுக்கு விருந்தும் அளிக்கப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசி ஆகியோரை இன்று ரஷ்ய அதிபர் புடின் சந்திப்பார் என்று அந்த நாடு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.