கூகுள் நிறுவனத்தின் இணை நிறுவனர் செர்ஜி பிரின், கோடீஸ்வரரான எலான் மஸ்க்குடன் தனது மனைவி தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகம் அடைந்து, வழக்கறிஞரும், தொழிலதிபருமான அவரது மனைவி நிக்கோல் ஷானஹானிடமிருந்து விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இப்பொது வெளியாகியுள்ள நீதிமன்ற ஆவணங்களின்படி, இந்த இருவரின் விவாகரத்து கடந்த மே மாதம் 26ம் தேதியே உறுதி செய்யப்பட்டுவிட்டது என்றும். அவர்கள் இருவரும், இப்போது தங்கள் 4 வயது மகளின் சட்டப்பூர்வ மற்றும் பாதுகாப்பிற்கான செலவுகளை பங்கிட்டுக்கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இருவரும் முதன்முதலில் கடந்த 2015ம் ஆண்டு தான் டேட்டிங் செய்யத் தொடங்கியுள்ளனர். அதே ஆண்டில் திரு. பிரின் தனது முதல் மனைவியான அன்னே வோஜ்சிக்கியிடம் இருந்து விவாகரத்து செய்தது குறிப்பிடத்தக்கது, இறுதியில் கடந்த 2018 இல் நிக்கோல் ஷனாஹனை மணந்தார் என்று அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
பல நாட்டு தலைவர்களை உள்ளடக்கிய சர்வே.. தொடர்நது முதலிடத்தில் இந்திய பிரதமர் மோடி - முழு விவரம் இதோ!
இருப்பினும், அவர்கள் கடந்த 2021ல் பிரிந்து தனித்தனியாக வாழத் தொடங்கினர், அதன் பிறகு திரு. பிரின் 2022 இல் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். நியூயார்க் போஸ்ட்டின் செய்திப்படி, தனது மனைவி நிக்கோலஸ் அவருக்கு பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்குடன் அஉறவு வைத்திருந்ததாக கூறி அவர் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார்.
ஆனால் இந்த விவகாரம் குறித்து ஒரு ட்வீட் (X) ஒன்றை வெளியிட்ட எலான் மஸ்க், நிக்கோலேவும் தானும் நல்ல நண்பர்கள் தான் என்றும், கடந்த 3 ஆண்டுகளில் அவர், அந்த பெண்ணை இரண்டு முறை மட்டுமே சந்தித்துள்ளதாகவும், அதும் அவர்கள் சந்தித்துக்கொண்டபோது பலர் அவர்கள் அருகில் இருந்தார்கள் என்றும், மேலும் அது ஒரு காதல் சந்திப்பு அல்ல என்றும் அவர் கூறியுள்ளார். அதேபோல நிக்கோலேவும் தன் கணவரின் கூற்றை மறுத்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியல்படி, 50 வயதான கூகுள் இணை நிறுவனர், 118 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஒன்பதாவது பணக்காராராக திகழ்ந்து வருகின்றார்.