நவீன முறையில் உள்ளாடையில் பிட் வைத்து அடித்த மாணவி

Asianet News Tamil  
Published : Oct 13, 2016, 05:42 AM ISTUpdated : Sep 19, 2018, 02:56 AM IST
நவீன முறையில் உள்ளாடையில் பிட் வைத்து அடித்த மாணவி

சுருக்கம்

தேர்வின்போது மாணவர்கள் பிட் அடிப்பதற்காக ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு முறையை பின்பற்றி வருகின்றனர். ஆசிரியர்கள் மாணவர்களின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள் அல்லவா.

மாணவர்கள் பிட் அடிப்பதற்காக பின்பற்றும் ஒவ்வொரு முறையையும் ஆசிரியர்கள் கண்டுபிடித்துக் கொண்டேதான் வருகின்றனர். மாணவர்களும் புதிய முறையில் பிட் அடிப்பதை கண்டுபிடித்துக் கொண்டேதான் வருகின்றனர்.

அந்த வகையில், ஜெர்மன் நாட்டில் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெண் ஒருவர் உள்ளாடையில் அதிநவீன கருவிகளை மறைத்து வைத்திருந்த சம்பவம் வெளியாகி உள்ளது.

ஜெர்மனியின் நார்த் ரைன் வெஸ்ட் பாலியா மாகாணம், சன்டெர்ன் நகரைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண், தேர்வு ஒன்றில் கலந்து கொண்டார். 

தேர்வின்போது, இந்த பெண் மீது சந்தேகம் கொண்ட கண்காணிப்பாளர், சோதனை நடத்தினார். அப்போது அந்த பெண் உள்ளாடையில் அதிநவீன கேமராவைப் பொருத்தி இருந்துள்ளார். இதன் மூலம், தேர்வு வினாத்தாள், குறிப்பிட்ட நபர் பார்க்க முடியும். அதற்கான விடைகளை, குறிப்பிட்ட நபர் கூறுவதற்கு ஏதுவாக ஹெட்செட் மூலம் அந்த பெண்ணுக்கு தெரிவிக்கப்படும். 

நூதன முறையில் பிட் அடித்த இந்த பெண்ணின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுபோன்று தேர்வு அறையில் ஈடுபடக்கூடாது எனவும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நன்றி கெட்ட நட்பு..! ஈரான் போரில் தனித்து விடப்பட்ட அமெரிக்கா..! வெளுத்து வாங்கிய டிரம்ப்..!
Iran US Conflict: அமெரிக்காவின் டீலை நிராகரித்த ஈரான்! இந்த 5 நிபந்தனைகளுக்கு ஓகே சொன்னா தான் அமைதியாம்!