நீங்கள் என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது . நாம் எப்போது இயல்பு நிலைக்கு திரும்ப போகிறோம் என்ற கேள்விதான் அது என என்னால் யூகிக்க முடிகிறது.
ஆரம்பத்திலேயே இந்த வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியிருந்தால் எங்கள் நாட்டில் இந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் ஆதங்கம் தெரிவித்துள்ளார் . ஃபிரான்சில் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக இருந்து வரும் நிலையில் ஊரடங்கு உத்தரவை மே 11-ம் தேதி வரை அவர் நீட்டித்து அவர் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது , 19 லட்சத்து 33 ஆயிரத்து 800 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் . உலகளவில் பலியானவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை 20 ஆயிரத்து 434 ஆக உயர்ந்துள்ளது , நாளுக்கு நாள் வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் மக்கள் மிகுந்த பீதிக்கு ஆளாகியுள்ளனர் . இந்நிலையில் அமெரிக்கா , இத்தாலி , ஸ்பெயின் , ஜெர்மனி , இங்கிலாந்து , துருக்கி , ரஷியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன . இந்நிலையில் பிரான்ஸில் மட்டும் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 779 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 967 ஆக உயர்ந்துள்ளது . ஆனால் கடந்த சில நாட்களாக புதிய நோய்த் தொற்று ஏதும் ஏற்படவில்லை இது பிரான்சுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது , ஆனால் அவசர சிகிச்சை பிரிவில் 6821பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் , எனவே பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது . இந்நிலையில் இங்கு, கடந்த மார்ச் 17ஆம் தேதி நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது இதனால் சுமார் 6.7 கோடி மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். இன்றுடன் பிரான்சில் ஊரடங்கு நிறைவடைய இருந்தது . ஆனாலும் இங்கு இன்னும் நோயின் தாக்கம் கட்டுக்குள் வராததால் மேலும் ஒருமாத காலத்திற்கு அதாவது மே 11-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அதிபர் இமானுவேல் மக்ரோன் உத்தரவிட்டுள்ளார் . இந்நிலையில் இன்று காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர் , கொரோனா வைரசால் நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது . நீங்கள் என்னிடத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது . நாம் எப்போது இயல்பு நிலைக்கு திரும்ப போகிறோம் என்ற கேள்விதான் அது என என்னால் யூகிக்க முடிகிறது.
ஆனால் இதற்கு தற்போதைக்கு என்னிடத்தில் பதில் இல்லை. ஆனால் ஒன்றை மட்டும் வெளிப்படையாக கூறுகிறேன் நிச்சயம் மே 11-ஆம் தேதிக்கு பிறகுதான் அனைத்தும் செயல்படத் தொடங்கும் , ஆனாலும் உணவு விடுதிகள் , திரையரங்குகள் , போன்றவற்றை முழுமையாக மூடி வைக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த வைரஸை முன்கூட்டியே கணித்து அதைத் நாம் தடுக்க தவறிவிட்டோம், இத்தனை பெரிய பாதிப்புகளுக்கும் அதுதான் காரணம் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். நிலைமை கட்டுக்குள் வரும்வரை அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இருந்து விமானங்கள் வர தடை விதிக்கப்படுகிறது , நாட்டில் இந்த வைரஸின் அறிகுறிகள் இருக்கும் வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் நிச்சயம் வெளியில் செல்லும் அனைவரும் முகக் கவசம் அணிந்து செல்லுங்கள் , அனைவருக்கும் வைரஸ் பரிசோதனை செய்யப்படும், முகக் கவசங்கள் வழங்கப்படும் , வைரஸை எந்த அளவுக்கு எதிர்க்க முடியுமோ அந்த அளவிற்கு எதிர்க்க நாம் தயாராக வேண்டும் விரைவில் நாம் இயல்பு நிலைக்கு திரும்புவோம் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.