உணவு விநியோகம் செய்பவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு சிங்கப்பூரில் கடந்த ஆண்டு துவங்கப்பட்டது.
நாம் வீட்டில் இருந்தபடியே நிம்மதியாக உணவு உண்பதற்கு வெயில், மழை மற்றும் புயல் என்று பாராமல் உதவி செய்பவர்கள் தான் உணவு விநியோகம் செய்யும் நபர்கள். சிங்கப்பூரில் இந்த உணவு விநியோகம் செய்பவர்களை மகிழ்விக்கும் மற்றும் பாராட்டும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு துவங்கப்பட்டது தான் "மெக்டொனால்ட்ஸ் ரைடர்ஸ் டே".
உணவு விநியோகம் செய்யும் அவர்களுடைய கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பாராட்டும் வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த வருடம் எதிர்வரும் ஜூலை 20ம் தேதி இந்த "மெக்டொனால்ட்ஸ் ரைடர் டே" நிகழ்வு நடக்க உள்ளது.
இந்த உணவைப் பெற உணவு டெலிவரி செய்யும் ரைடர்கள் ஜூலை 20ம் தேதி மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை சிங்கப்பூரில் உள்ள எந்த ஒரு McDonald's அவுட்லெட்டுக்கு வேண்டுமானாலும் தங்கள் யூனிபார்ம் சட்டையுடன் சென்றால் போதும் அவர்களுக்கு அந்த இலவச உணவு கிடைக்கும்.
அந்த இலவச உணவில் மூன்று வகையான உணவுகள் இருக்கும், அதனோடு சேர்த்து அவர்களுக்கு ஒரு குப்பனும் வழங்கப்படும். இது அனைத்து விதமான உணவு விநியோக நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தும்.
ஸ்டீராய்டு ; அதிம் உள்ள 4 பொருட்களுக்கு சிங்கப்பூர் சுகாதாரத்துறை தடை!