மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 55 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீன்பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 55 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஹோண்டுராஸ் நாட்டில் மீன்பிடி படகில் 100-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது, காற்றின் வேகத்தின் காரணமாக மீனவர்கள் செய்த படகு திடீரென விபத்தில் சிக்கியது. இது தொடர்பாக உடனே மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், விபத்தில் 27 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 55 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். 9 பேரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்த 27 பேரின் உடலை கைபற்றிய மீட்பு குழுவினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோசமான வானிலையின் காரணமாகவே விபத்து நிகழ்ந்தாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.