உலகம் முழுவதும் கடந்த சில மணி நேரங்களாக வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் படங்களை பார்க்க முடியாத பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப்பில் பதிவிறக்கம் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் நொடிக்கு நொடி ஆயிரக்கணக்கான கோடி பேர் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்வற்றை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலை தளங்கள் ஒரு நிமிடம் வேலை செய்யவில்லை என்றால் கூட உலகமே ஸ்தம்பித்துவிடும்.
அந்த அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவை இரண்டற கலந்துவிட்டன.
இந்நிலையில் உலகம் முழுவதும் பல நாடுகளில் சமூகவலைதளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், உள்ளிட்ட பல தளங்களில் சரியாக இயக்கமாமல் பிரச்னைகளை சந்தித்து வருகிறது.
பேஸ்புக், இஸ்டாகிராம், வாட்ஸ் அப், மற்றும் பேஸ்புக்கின் அக்குலஸ் விஆர் போன்ற தளங்களில் இந்த பிரச்சனை தற்போது நிலவி வருகிறது. புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பதிவிறக்கம் செய்வதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.